கண்டகி பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நேபாள மாநில எண் 4 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கண்டகி பிரதேசம்
மாநிலம்
நேபாள மாநிலங்கள்
கண்டகி பிரதேசம் (மாநில எண் 4-இன்) வரைபடம்
கண்டகி பிரதேசம் (மாநில எண் 4-இன்) வரைபடம்
நாடு நேபாளம்
தலைநகரம்பொக்காரா
முக்கிய நகரங்கள்பொக்காரா, வாலிங், தமௌலி, கவாசோத்தி, பக்லூங் பஜார், குஸ்மா, பேசிசாகர் மற்றும் சோம்சோம்
மாவட்டங்கள்11
அரசு
 • Bodyமாநில அரசு எண் 4
 • ஆளுநர்பாபுராம் குன்வர்
 • முதலமைச்சர்பிரிதிவி சுப்பா குரூங் (மாவோயிஸ்ட்)
 • சபாநாயகர்நேத்திரநாத் அதிகாரி
 • தேர்தல் தொகுதிகள்
 • மாநில சட்டமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்21
மக்கள்தொகை
 • மொத்தம்2
 • அடர்த்தி110
இனங்கள்நேபாளிகள்
நேர வலயம்நேபாள சீர் நேரம் (ஒசநே+5:45)
GeocodeNP-FO
அலுவல் மொழிகள்நேபாளி, குரூங் மொழி, மற்றும் மகர் மொழி
பிற மொழிகள்தமாங் மொழி, தகலி மொழி, தூர மொழி முதலியன
இணையதளம்p4ocmcm.gov.np

கண்டகி பிரதேசம் (Kandaki Pradesh), 20 செப்டம்பர் 2015 அன்று புதிதாக வரையறுக்கப்பட்ட நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எண் 4-இன் படி, நேபாள நாட்டை, நிர்வாக வசதிக்காக ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. [1] இந்த ஏழு மாநிலங்களுக்குத் தற்போது ஒன்று முதல் ஏழு வரை எண்கள் வழங்கப்பட்டுள்ளது. மாநில எண் 4 என பெயரிடப்பட்டிருந்த இம்மாநிலத்திற்கு தற்போது கண்டகி பிரதேசம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 295 (2)-இன் படி, மாநிலங்களின் பெயர்கள், புதிதாக உருவாக்கப்படும் அந்தந்த மாநில சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரிக்கும் பெயர் மாநிலத்திற்கு இடப்படும். அதுவரை மாநிலப் பகுதிகள் எண்கள் மட்டும் அரசுக் குறிப்புகளில் இடம் பெறும் இம்மாவட்டத்தின் பரப்பளவு 21,504 சதுர கிலோ மீட்டராகும். இதன் மக்கள் தொகை 2,413,907 ஆக உள்ளது.[2]

இம்மாநிலத்தின் தலைநகரம் பொக்காரா ஆகும்.

அமைவிடம்[தொகு]

மத்தியவடக்கு நேபாளத்தில் அமைந்த இம்மாநிலத்தின் வடக்கே திபெத் தன்னாட்சிப் பகுதியும், தெற்கில் நேபாள மாநில எண் 5, கிழக்கில் நேபாள மாநில எண் 3, மேற்கில் நேபாள மாநில எண் 6 எல்லைகளாக அமைந்துள்ளது.

மக்கள்தொகையியல்[தொகு]

Circle frame.svg

கண்டகி பிரதேச இனக்குழுக்கள்

  கமி மக்கள் (8.7%)
  தமாலி மக்கள் (3.9%)Circle frame.svg

கண்டகி பிரதேசத்தில் சமயங்கள்

  பிறர் (0.60%)

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 21,504 சகிமீ பரப்பளவு கொண்ட கண்டகி பிரதேச மக்கள்தொகை 2,403,016 ஆகும். இது நேபாள மக்கள்தொகையில் 9.06% ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 9,48,028 ஆகவும்; பெண்கள் 1,144,124 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தியானது 1 சகிமீ பரப்பில் 110 வீதம் உள்ளனர். பாலின விகிதம் 100 பெண்களுக்கு, 89 ஆண்கள் வீதம் உள்ளனர். நகர்புற மக்கள்தொகை 60.5%; கிராமப்புற மக்கள்தொகை 39.5% ஆகவுள்ளது. [3]

மாநில எண் 4-இன் மாவட்டங்கள்[தொகு]

1. கோர்க்கா மாவட்டம்
2. லம்ஜுங் மாவட்டம்
2. மியாக்தி மாவட்டம்
4. காஸ்கி மாவட்டம்
5. மனாங் மாவட்டம்
6. முஸ்தாங் மாவட்டம்
7. பர்பத் மாவட்டம்
8. சியாங்ஜா மாவட்டம்
09. பாகலுங் மாவட்டம் (கிழக்கு)
10. தனஹு மாவட்டம்
11. நவல்பராசி மாவட்டம் (கிழக்கு)

அரசியல்[தொகு]

இம்மாநில சட்டமன்றத்தின் 60 உறுப்பினர்களில் 36 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும், 24 உறுப்பினர்கள் விகிசாத்சாரத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மேலும் நேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 18 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கிறது.

அரசாங்கம்[தொகு]

2017 சட்டமன்றத் தேர்தலில், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியத்தின் கூட்டணிக் கட்சிகள் பெரும் வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சியின் அங்கமான மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரிதிவி சுப்பா குரூங், இம்மாநில அரசின் முதலாவது முதலமைச்சராக 16 பிப்ரவரி 2018 அன்று பதவியேற்றார். [4]

2017 சட்டமன்ற தேர்தல் முடிவுகள், மாநில எண் 4[தொகு]

அரசியல் கட்சி நேரடித் தேர்தலில் விகிசாத்சார முறையில் மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 17 373,501 39.04 10 27
நேபாளி காங்கிரஸ் 6 364,797 38.13 9 15
align="left" மாவோயிஸ்ட் 9 119,528 12.49 3 12
நவ சக்தி கட்சி 1 24,625 2.57 1 2
ராஷ்டிரிய ஜனமோர்ச்சா 2 19,376 2.03 1 3
பிறர் 0 54,992 5.75 0 0
சுயேட்சைகள் 1 1
மொத்தம் 36 956,819 100 24 60
Source: Election Commission of Nepal

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nepal Provinces". statoids.com. பார்த்த நாள் 2016-03-21.
  2. http://www.statoids.com/unp.html
  3. "Province Profile".
  4. Chief Minister of Province 4 sworn in
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டகி_பிரதேசம்&oldid=2739072" இருந்து மீள்விக்கப்பட்டது