மேச்சி மண்டலம்

ஆள்கூறுகள்: 27°10′N 87°55′E / 27.167°N 87.917°E / 27.167; 87.917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மேச்சி மண்டலத்தின் மாவட்டங்கள்

மேச்சி மண்டலம் (Mechi) (நேபாளி: मेची अञ्चलகேட்க) நேபாள நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ளது. நேபாளத்தின் பதினான்கு மண்டலங்களில் மேச்சி மண்டலமும் ஒன்று. மேச்சி மண்டலத்தின் பரப்பளவு 8,196 சதுர கிலோ மீட்டராகும். மேச்சி மண்டலத்தின் நிர்வாகாத் தலைமையிடம் இலாம் நகரத்தில் அமைந்துள்ளது.

மேச்சி மண்டல மாவட்டங்கள்[தொகு]

மேச்சி மண்டலத்தில், சாப்பா மாவட்டம், இலாம் மாவட்டம், பாஞ்சதர் மாவட்டம் மற்றும் தாப்புலேசங்கு மாவட்டம் என நான்கு மாவட்டங்கள் அமைந்துள்ளது.

மேச்சி மண்டலத்தின் வடக்கில் திபெத் தன்னாட்சிப் பகுதியும், தெற்கில் இந்தியாவும் அமைந்துள்ளது.

மேச்சி மண்டலத்தின் பெரு நகரம் தராய் பகுதியின் தமக் நகரம் ஆகும். மேச்சி மண்டலத்தின் பெருவாரியான மக்கள் நேவார் மக்கள், கிராந்தி மக்கள், லிம்பு மக்கள், கிராதர்கள் ராய் மக்கள், செட்டிரிகள் போன்ற மலைவாழ் பழங்குடிகள் வாழ்கின்றனர்.

இம்மண்டலத்தில் நேபாள மொழி, போச்சுபுரி மொழி, மைதிலி மொழி, லிம்பு மொழி, இராய் மொழிகள் பேசப்படுகிறது.

மேச்சி மண்டலத்தில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களில் சாப்பா மாவட்டம் மட்டும் தராய் சமவெளியில் உள்ளதால் வேளாண்மையில் சிறப்பாக உள்ளது. மற்ற மூன்று மாவட்டங்களில் இலாம் மற்றும் பாஞ்சதர் மாவட்டங்கள் மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்துள்ளது. தாப்புலேசங்கு மாவட்டம் மட்டும் இமயமலையின் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. கஞ்சஞ்சங்கா மலை தாப்புலேசங்கு மாவட்டத்தில் உள்ளது.

மேச்சி மண்டலத்தில் மேச்சி வானூர்தி நிலையம் மற்றும் தாப்புலேசங்கு மாவட்டத்தில் அமைந்த பகதூர் வானூர்தி நிலையம் என இரண்டு வானூர்தி நிலையங்கள் அமைந்துள்ளது.

அரிசி, பாக்கு மற்றும் தேயிலை உற்பத்தியில் மேச்சி மண்டலம் முன்னிலை வகிக்கிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோளகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=மேச்சி_மண்டலம்&oldid=3592465" இலிருந்து மீள்விக்கப்பட்டது