விதேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விதேகம்
நேபாளி: विदेह
~ கி மு 1100–~ கி மு 500
விதேக நாடு
பிந்தைய வேத காலத்திய விதேக நாடும் மற்றைய நாடுகளும்
தலைநகரம்மிதிலை, நேபாளம்
பேசப்படும் மொழிகள்மைதிலி
சமயம்
வேத சமயம், இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
சனகன் 
வரலாற்று சகாப்தம்பிந்தைய வேத காலம்
• தொடக்கம்
~ கி மு 1100
• முடிவு
~ கி மு 500
பின்னையது
}
[[வஜ்ஜி]]
[[மகாஜனபதங்கள்]]
தற்போதைய பகுதிகள் இந்தியா
 நேபாளம்
மைதிலி மொழி பேசும் தற்கால பிகார் மற்றும் ஜார்கண்ட் மாவட்டங்கள்

விதேகம் (Videha) (நேபாளி: विदेह) பிந்தைய வேத கால நாடுகளில் ஒன்றாகும். விதேக நாடு தற்கால இந்தியாவின் வடக்கு பிகார் - தெற்கு நேபாள எல்லையில் அமைந்திருந்தது. விதேக நாட்டின் தலைநகரம் மிதிலை நகரம் ஆகும். பிந்தைய வேத கால முடிவில், விதேக நாடு,[1] வஜ்ஜி நாட்டின் பகுதியாக மாறி, முடிவில் மகதப் பேரரசில் இணைக்கப்பட்டது.[2]விதேக நாட்டின் சிறப்பான மன்னர்களில் சனகன் முதன்மையானவர். மைதிலி மொழி விதேக நாட்டின் முதன்மை மொழியாகும்.

உபநிடதங்களில்[தொகு]

இராஜரிஷி சனகருக்கு உபதேசிக்கும் யாக்யவல்க்கியர்

உபநிடதங்களில் குறிப்பாக பிரகதாரண்யக உபநிடதத்தில், விதேக நாட்டையும், அதன் மன்னன் சனகரின் பிரம்ம ஞானத்தை குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. யாக்யவல்க்கியர் போன்று வேதாந்த தத்துவத்தில் மிகப்புலமையுடைய இராஜரிஷியாக விளங்கியவர் விதேக நாட்டு மன்னர் சனகர்.[3] [4] பல முனிவர்கள் விதேக மன்னரிடம் ஆத்ம ஞானம் மற்றும் பிரம்ம ஞானம் தொடர்பான ஐயங்களைக் கேட்டுச் செல்வர்.

இராமாயனத்தில்[தொகு]

வால்மீகி எழுதிய இராமாயண காவியத்தில் விதேக நாட்டையும், அதன் மன்னர் சனகரையும் குறிக்கப்பட்டுள்ளது. சனகரின் மகள் சீதையை, கோசல நாட்டு இளவரசன் இராமன் மணந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Videha Ancient kingdom, India
  2. H.C. Raychaudhuri (1972), pp. 70-76
  3. Hem Chandra Raychaudhuri (1972), Political History of Ancient India and Nepal, Calcutta: University of Calcutta, pp.41–52
  4. Michael Witzel (1989), Tracing the Vedic dialects in Dialectes dans les litteratures Indo-Aryennes ed. Colette Caillat, Paris, pages 13, 39-46, 141-143
"https://ta.wikipedia.org/w/index.php?title=விதேகம்&oldid=2458109" இலிருந்து மீள்விக்கப்பட்டது