நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேபாள இராஷ்டிரிய ஜனதா கட்சி
राष्ट्रिय जनता पार्टी नेपाल
சுருக்கக்குறிRJPN
தலைவர்மகந்த் தாக்கூர்
தொடக்கம்ஏப்ரல் 20, 2017 (2017-04-20)
இணைந்தவைதராய்-மாதேசி ஜனநாயகக் கட்சி
சத்பவனா கட்சி
ராஷ்டிரிய மாதேசி சமாஜ்வாடி கட்சி
தராய் மாதேசி சத்பவனா கட்சி
மாதேசி மக்கள் அதிகார மையம் (குடியரசு)
நேபாள சத்பவனா கட்சி
கொள்கைசோசலிசம்
மாதேசி மற்றும் நேவார் மக்கள் உரிமை காத்தல்
சமய சார்பின்மை
அரசியல் நிலைப்பாடுமைய-இடது
நேபாள பிரதிநிதிகள் சபையில்
17 / 275
நேபாள தேசிய சபையில்
2 / 59
தேர்தல் சின்னம்
Rastriya Janata Party.png

நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சி (Rastriya Janata Party Nepal) (நேபாளி: राष्ट्रिय जनता पार्टी; மொழிபெயர்ப்பு: National People's Party Nepal; abbr. RJPN), நேபாளத்தின் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சி பல பிராந்திய கட்சிகளை ஒன்றிணைத்து, மகந்த் தாக்கூர் தலைமையில் 20 ஏப்ரல் 2017ல் தோற்றுவிக்கப்பட்டது. [1][2][3]

இக்கட்சி நேபாளத் தேர்தல் ஆனையத்தில் 7 சூலை 2017 அன்று பதிவு செய்துள்ளது. [4][5]

தேர்தல்களில்[தொகு]

உள்ளாட்சித் தேர்தல்களில்[தொகு]

நேபாள மாநில எண் 2ல் நடைபெற்ற உள்ளாட்சிச் தேர்தல்களில், நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 1,112 உள்ளாட்சி மன்ற உறுப்பினரகள் வெற்றி பெற்றது. மேலும் ஜனக்பூர் உள்ளிட்ட 25 நகராட்சிகளில் மேயர் பதவிகளை கைப்பற்றி, இரண்டாவது பெரிய கட்சியாக உருப்பெற்றது. [6][7]

மாநில சட்டமன்றத் தேர்தலில்[தொகு]

மேலும் மாநில எண் 2ன் சட்டமன்றத் தேர்தலில் 25 சட்டமன்ற இடங்களைக் கைபப்ற்றி, நேபாள பெடரல் சோசலிஸ்ட் கூட்டமைப்பு கட்சியுடன் இணைந்து, மாநிலத்தில் பிப்ரவரி 2018ல் கூட்டணி அரசு நிறுவியுள்ளது.[8]

நேபாள பிரதிநிதிகள் சபைத் தேர்தலில்[தொகு]

நேபாள பிரதிநிதிகள் சபைத் தேர்தலில், இக்கட்சி 17 இடங்களைக் கைப்பற்றி, நேபாளத்தில் நான்காவது பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது.[9]

நேபாள தேசிய சபைத் தேர்தலில்[தொகு]

பிப்ரவரி, 2018ல் நடைபெற்ற நேபாள தேசிய சபைக்கான தேர்தலில், நேபாள மாநில எண் 2லிருந்து, நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சி, இரண்டு இடங்களைக் கைப்பற்றியுள்ளது.[10][11]

கட்சியின் தேர்தல் செயல்திறன்[தொகு]

2017 - 18ல் நேபாள பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில், இக்கட்சி 4,72,254 வாக்குகளும் (4.95%), 17 இடங்களையும் கைப்பற்றி, நான்காவது பெரிய கட்சியாக விளங்குகிறது.

தேர்தல் தலைவர் வாக்குகள் இடங்கள் தகுதி நிலை ஆட்சி அமைத்தல்
# %
நேபாள பிரதிநிதிகள் சபைத் தேர்தல், 2017-2018 மகந்த் தாக்கூர் 472,254 4.95
17 / 275
4வது இடம் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்- மாவோயிஸ்ட்

மேற்கோள்கள்[தொகு]