மொழிபெயர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Rosetta Stone BW.jpeg

ஒரு மொழியில் உள்ள உரைப்பகுதியின் பொருளை விளக்கி அதே பொருள் தரக்கூடிய இன்னொரு உரைப்பகுதியை வேறொரு மொழியில் உருவாக்குதல் மொழிபெயர்ப்பு எனப்படுகின்றது. இங்கே முதல் உரைப்பகுதி மூல உரைப்பகுதி என்றும் உருவாக்கப்பட்ட உரைப்பகுதி இலக்கு உரைப்பகுதி என்றும் குறிப்பிடப்படுகின்றது. இலக்கு உரைப்பகுதி, மூல உரைப்பகுதியின் மொழிபெயர்ப்பு ஆகும்.

மொழிபெயர்ப்பு, சூழ்நிலைகளையும், இரண்டு மொழிகளினதும் இலக்கண விதிகளையும், அவற்றின் எழுத்து மரபுகளையும், மரபுத் தொடர்களையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

இரு மொழிகளுக்கிடையே சொல்லுக்குச் சொல்லு ஒப்புமையுடன் கூடிய எளிமையான தொடர்புகள் இருப்பதாகவும், அதனால் மொழிபெயர்ப்பு என்பது நேரடியான ஒரு இயந்திரத் தன்மையான செயற்பாடு எனவும் பொதுவான தப்பெண்ணம் நிலவுகிறது. ஆனால், ஒவ்வொரு மொழியும் வரலாற்று அடிப்படையில் வளர்ச்சியடைந்த ஒரு முறைமையாக உள்ளது. இவ்வாறு வரலாற்று அடிப்படையில் உருவான வேறுபாடுகள் மொழிகளின் வெளிப்படுத்தும் தன்மையிலும் வேறுபாடுகளை உருவாக்குகின்றன. மொழிகளிடையே, இலக்கண அமைப்பு, சொற்பிறப்பு, மரபுத் தொடர்கள் ஆகியவற்றில் வேறுபாடுகள் காணப்படுவதனால் சொல்லுக்குச் சொல்லு நேரடியான மொழிபெயர்ப்புச் சாத்தியமாக இருப்பதில்லை.

எனவே கூகிள் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்ற மொழிபெயர்ப்புகளில் ஏராளமான பிழைகள் ஏற்படுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மொழிபெயர்ப்பு&oldid=1627278" இருந்து மீள்விக்கப்பட்டது