உள்ளடக்கத்துக்குச் செல்

நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம்

व्यवस्थापिका संसद
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
தலைமை
தலைவர்
ஒன்சாரி கார்தி மகர், நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)
16 அக்டோபர் 2013 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்593
இரண்டாவது நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம், 2013
அரசியல் குழுக்கள்
  நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சி: 24
  ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி: 19
  ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி: 18
  நேபாள சோசலிச கூட்டமைப்பு: 15
   நேபாள பொதுவுடமைக் கட்சி (மார்க்சிய கூட்டு): 5
  நேபாள தொழிலாளர்கள் & விவசாயிகள் கட்சி: 4
  ராஷ்டிரிய ஜனமோர்ச்சா :3
  நேபாள் பரிவார் தளம் :2
  பிற கட்சிகள்:10
ஆட்சிக்காலம்
நான்கு ஆண்டுகள்
தேர்தல்கள்
வாக்களிப்பு முறை: கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில், வாக்காளர்கள் நேரடியாக 240 உறுப்பினர்களையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் 335 உறுப்பினர்களும், தேர்ந்தெடுப்பர். நேபாள பிரதமர் நியமிக்கும் இரண்டு உறுப்பினர்களை நியமிப்பார்.
அண்மைய தேர்தல்
நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம், 2013
அடுத்த தேர்தல்
நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017
வலைத்தளம்
http://www.parliament.gov.np/

நேபாள அரசியல் நிர்ணயமன்றம், 2013 (Legislature Parliament of Nepal) (நேபாளி: व्यवस्थापिका संसद) ஓரவையுடன் கூடியது.[1] நேபாளத்தின் முதல் அரசியலமைப்பு நிர்ணய மன்றம், புதிய அரசியலமைப்பு சட்டத்தை இயற்ற தவறியதால், 2013ல் நடைபெற்ற நேபாள நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு இந்த இரண்டாவது புதிய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது.[2] இந்த அரசியலமைப்பு நிர்ணய மன்றம் இயற்றிய நேபாள அரசியலமைப்புச் சட்டம், 20 செப்டம்பர் 2015 அன்று முதல் நடைமுறைக்கு வந்ததது.

நேபாளத்தின் புதிய அரசியலமைப்புச் சட்டப்படி நேபாள நாடாளுமன்றத்திற்கு 275 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில், 26 நவம்பர் 2017 மற்றும் 7 டிசம்பர் 2017 அன்று இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த, அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால்[3], அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் பணிக் காலம் 14 அக்டோபர் 2017ல் முடிவடைந்தது. [4]

தோற்றம்

[தொகு]

முன்னாள் நேபாள பிரதம அமைச்சரும், நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரும் ஆன சூரிய பகதூர் தாபா, 20 சனவரி 2014ல் அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] இம்மன்றத்தின் முதல் கூட்டத்தில் 565 உறுப்பினர்கள் 21 சனவரி 2014 அன்று பதவியேற்பு உறுதிமொழி ஏற்றனர். [6]நேபாளத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஓராண்டிற்குள் அரசியலமைப்பின் வரைவு நகலை தயாரிக்க உறுதியளித்தனர்.[7] [8] இதன் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள் ஆகும்.

சிறப்புகள்

[தொகு]

நாடாளுமன்றம் & உறுப்பினர்கள்

[தொகு]

அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத்தின் வரைவு அறிக்கையின் படி, நேபாள நாடாளுமன்றம் கீழவை மற்றும் மேலவை என இரண்டு சபைகளைக் கொண்டிருக்கும். வாக்காளர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கபடும் உறுப்பினர்கள் கொண்ட, பிரதிநிதிகள் சபையும் (கீழவை), கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவ விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் கொண்ட, தேசிய சட்டமன்றமும் (மேலவை) கொண்டிருக்கும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் பெரும்பான்மையான உறுப்பினர்களால் நேபாளப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

மாநிலங்களின் சட்ட மன்றங்கள்

[தொகு]

ஓரவை கொண்ட நேபாள மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், வாக்களாளர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாநில சட்டமன்றத் தேர்தல்களில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை நடைமுறை இல்லை.

குழுக்கள்

[தொகு]

புதிய அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றுவதற்கு உதவியாக கீழ் கண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டது.[9]

  • அரசு விவகாரங்களுக்கன குழு
  • பொதுக் கணக்குக் குழு
  • சூழழியல் பாதுகாப்பு குழு Environment Protection Committee
  • பன்னாட்டு உறவு மற்றும் தொழிலாளர் நலக் குழு
  • வரைவு அரசியலமைப்புச் சட்டக் குழு
  • நல்லாட்சி மற்றும் கண்காணிப்புக் குழு
  • தொழில், வணிகம், நுகர்வோர் பாதுகாப்புக் குழு
  • மகளிர், குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் சமூக நலக் குழு
  • வளர்ச்சி திட்டங்களுக்கான குழு
  • வேளாண்மை மற்றும் நீர் ஆதாரங்களுக்கான குழு
  • நிதிக் குழு
  • நாடாளுமன்ற விசாரணை சிறப்புக் குழு

சிறப்புகள்

[தொகு]

நாடாளுமன்றம் & உறுப்பினர்கள்

[தொகு]

அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத்தின் வரைவு அறிக்கையின் படி, 275 உறுப்பினர்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றம் கீழவை மற்றும் மேலவை என இரண்டு சபைகளைக் கொண்டிருக்கும். வாக்காளர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கபடும் 165 உறுப்பினர்கள் கொண்ட, பிரதிநிதிகள் சபையும் (கீழவை), கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவ பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 110 உறுப்பினர்கள் கொண்ட, தேசிய சட்டமன்றமும் (மேலவை) கொண்டிருக்கும்.[10]

நடைமுறைக்கு வருதல்

[தொகு]

நேபாள அரசியல் நிர்ணய மன்றத்தின் வரைவு அரசியலமைப்பு சட்டம், நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015 என்ற பெயரில், 20 செப்டம்பர் 2015 முதல் நடைமுறைக்கு வந்ததது. இதன் மூலம் முந்தைய 2007ம் ஆண்டின் தற்காலிக அரசியல் அமைப்பு சட்டம் நீக்கப்பட்டது.

நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம், நேபாள அரசை சமயச் சார்பற்ற, ஜனநாயக கூட்டாச்சிக் குடியரசு என பெயரிட ஏற்றது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Constituent Assembly". Constituent Assembly of Nepal. Archived from the original on 22 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 22 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "CA dissolved; PM proposes fresh election for Nov 22". eKantipur. 28 May 2012 இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402174909/http://www.ekantipur.com/2012/05/28/top-story/ca-dissolved-pm-proposes-fresh-election-for-nov-22/354644.html. பார்த்த நாள்: 22 January 2014. 
  3. "Govt decides to hold provincial, parliamentary polls in two phases". The Himalayan Times. International Media Network Nepal (Pvt) Ltd. பார்க்கப்பட்ட நாள் 31 August 2017.
  4. "सकियो ५ सय ९२ सांसदको कार्यकाल, आजैदेखि पूतपूर्व". Sajha Post. Archived from the original on 3 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 25 October 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Thapa assumes office as head of CA". My Republica. 20 January 2014. http://www.myrepublica.com/portal/index.php?action=news_details&news_id=68281. பார்த்த நாள்: 22 January 2014. 
  6. "565 CA members sworn in, first CA meet today". My Republica. 22 January 2014. http://www.myrepublica.com/portal/index.php?action=news_details&news_id=68356. பார்த்த நாள்: 22 January 2014. 
  7. "Nepal takes step towards new constitution. Political leaders pledge to draw up constitution within a year as new parliament convenes.". Al Jazeera. 23 January 2014. http://www.aljazeera.com/news/asia/2014/01/nepal-takes-step-towards-new-constitution-201412332020482362.html. பார்த்த நாள்: 24 January 2014. 
  8. "Nepal's new lawmakers pledge early charter". China Daily. 21 January 2014. http://www.chinadailyasia.com/news/2014-01/21/content_15114008.html. பார்த்த நாள்: 24 January 2014. 
  9. "समितिहरु". Archived from the original on 17 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 17 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Constitution of Nepal, 2015 (2072)" (PDF). Archived from the original (PDF) on 2018-01-27. பார்க்கப்பட்ட நாள் 2017-12-07.