சாலா நாத் கனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாலா நாத் கனால்
Jhala Nath Khanal
நேபாளப் பிரதமர்
பதவியில்
6 பெப்ரவரி 2011 – 29 ஆகஸ்டு 2011
குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ்
முன்னவர் மாதவ் குமார் நேபாள்
தனிநபர் தகவல்
பிறப்பு 20 மே 1950 (1950-05-20) (அகவை 73)
சாக்கிஜுங், நேபாளம்
அரசியல் கட்சி நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)(1991–இன்று)
பிற அரசியல்
சார்புகள்
நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)(1991 இற்கு முன்னர்)

சாலா நாத் கனால் (Jhala Nath Khanal, நேபாளம்: झलनाथ खनाल, ஜாலா நாத் கனால்; பிறப்பு: மே 20, 1950) பெப்ரவரி 2010 இல் இருந்து நேபாளத்தின் பிரதமரும்[1], நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) இன் தலைவரும் ஆவார்[2].

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

கனால் நேபாளக் கம்யூனிஸ்ட் (மார்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் உறுப்பினராகவும், பின்னர் 1982 முதல் 1986 வரை அக்கட்சியின் பொதுச் செயலரகவும் பணியாற்றினார். பின்னர் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) இல் இணைந்தார். 1997 கூட்டு அரசாங்கத்தில் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார்[3].

2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் இலாம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2008 முதல் பெப்ரவரி 2009 வரை மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியக் கட்சியின் பொதுச் செயலாலராகவும், பின்னர் பெப்ரவரி 16, 2009 முதல் அக்கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

பிரதமர்[தொகு]

பெப்ரவரி 2011 இல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சாலா நாத் கனால்

ஏழு மாதங்களாக பிரதமர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே இடம்பெற்ற போட்டிகளில் எவரும் போதியளவு வாக்குகள் பெறாமல் அப்பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இறுதியாக 2011 பெப்ரவரி 6 இல் கனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1]. 601 உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றத்தில் கனாலுக்கு ஆதரவாக 368 வாக்குகள் கிடைத்தன. இவருக்கு அடுத்தபடியாக நேபாள காங்கிரசு கட்சியின் ராம் சந்திரா பவுடெல் 122 வாக்குகளைப் பெற்றார்[1].

சூன் 2010 இல் மாதவ் குமார் நேபாள் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து நேபாளத்தில் முறையான ஓர் அரசு இருக்கவில்லை. சூலை மாதத்தில் இருந்து 16 தடவைகள் இடம்பெற்ற பிரதமருக்கான வாக்கெடுப்புகளில் எவரும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை[1]. எனினும், 2011 பெப்ரவரி 3 இல் நேபாளத்தின் மிகப்பெரும் செல்வாக்குள்ள கட்சியான நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தேர்தலில் தனது கட்சி வேட்பாளரை போட்டியில் இருந்து விலக்கியதை அடுத்து, கனாலுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தது. இதனை அடுத்து கனால் நேபாளத்தின் மூன்றாவது பிரதமரானார். 2008 ஆம் ஆண்டில் நேபாளம் குடியரசானது.[1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலா_நாத்_கனால்&oldid=3243773" இருந்து மீள்விக்கப்பட்டது