லும்பினி மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லும்பினி மண்டலத்தின் மாவட்டங்கள்

லும்பினி மண்டலம் (Lumbini zone) (நேபாளி: लुम्बिनी अञ्चलஇந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க) தெற்காசியாவின் நேபாள நாட்டின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலம் மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 5-இல் அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடம் புத்வால் நகரம் ஆகும். [1] பண்டைய சாக்கியர்களும், கோலியர்களும் இம்மண்டலத்தில் வாழ்ந்தனர். கௌதம புத்தர் பிறந்த பண்டைய லும்பினி நகரம் மற்றும் கபிலவஸ்துவை யுனெஸ்கோ நிறுவனம், உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.[2]

மாவட்டங்கள்[தொகு]

லும்பினி மண்டலம் ஆறு மாவட்டங்களைக் கொண்டது. நேபாளத்தின் தெற்கே அமைந்த தராய் பகுதியில் கபிலவஸ்து, நவல்பராசி, வடக்கில் ரூபந்தேஹி மாவட்டங்களும், மலைப்பாங்கான குன்றுப் பகுதிகளில் அர்காகாஞ்சி, குல்மி மற்றும் பால்பா மாவட்டங்களும் அடங்கியுள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

லும்பினி மண்டலம் கடல் மட்டத்திலிருந்து நூற்றி இருபது மீட்டர் முதல் இரண்டாயிரம் மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மண்டலத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப வளையம் என மூன்று காலநிலைகளில் காணப்படுகிறது. [3]இம்மண்டலம் தெற்கில் இந்தியாவின் பிகார் மாநிலத்தை எல்லையாகக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்[தொகு]

காளி கண்டகி ஆறு, ரோகிணி ஆறு தினௌ ஆறு, ரித்திஆறு, பூர்வா ஆறு, சூம்சா ஆறு மற்றும் தோவன் ஆறு என ஆறு ஆறுகள் இம்மண்டலத்தில் பாய்கிறது. இம்மண்டலத்தின் தராய் சமவெளிகளில் நெல், கோதுமை மற்றும் சோளம் அதிகம் பயிரிடப்படுகிறது. மலைப்பாங்கான குன்றுப் பகுதிகளில் அமைந்த அர்காகாஞ்சி, குல்மி மற்றும் பால்பா மாவட்டங்களில் காபி பயிரிடப்படுகிறது.

மக்கள் தொகையியல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மண்டலத்தின் மக்கள் தொகை 28,34,612 ஆகும். [4]இம்மண்டலத்தின் மக்கள் நேபாள மொழி, அவதி மொழி, போஜ்புரி மொழி, மைதிலி மொழி மற்றும் தாரு மொழியைப் பேசுகின்றனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூற்று: 27°45′N 83°30′E / 27.750°N 83.500°E / 27.750; 83.500

"https://ta.wikipedia.org/w/index.php?title=லும்பினி_மண்டலம்&oldid=2170334" இருந்து மீள்விக்கப்பட்டது