இராஜமௌலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எஸ். எஸ். இராஜமௌலி
பிறப்பு அக்டோபர் 10, 1973 (1973-10-10) (அகவை 43)
ரெய்ச்சூர், கருநாடகம், இந்தியா
இருப்பிடம் ஹதராபாத், ஆந்திர பிரதேசம், இந்தியா
வாழ்க்கைத் துணை இரமா இராஜமௌலி [1]
பிள்ளைகள் கார்த்திகேயா, மயூகஹா
வலைத்தளம்
www.ssrajamouli.in

இராஜமௌலி சிறீசைல சிறீ இராஜமௌலி சுருக்கமாக சி. சி. இராஜமௌலி (எஸ். எஸ். இராஜமௌலி) என்று அழைக்கப்படுகிறார். இவர் புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குனராவார். இவர் இயக்குனர் கே. ராகவேந்திர ராவ் வழிகாட்டுதலின் கீழ் தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார். இயக்குனரும் எழுத்தாளருமான வி. விஜயேந்திர பிரசாத் என்பவருக்கு மகனாக கருநாடக மாநிலம் ரெய்ச்சூரில் அக்டோபர் 10, 1965ல் பிறந்தார்.

இவரின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் நெம்பர் 1, இதை ராகவேந்திர ராவ் தயாரிக்க அவரின் உதவியாளராக இருந்த இவர் இயக்கினார். இதில் கதாநாயகனாக ஜூனியர் என் டி ஆர் நடித்தார். இதுவே ஜூனியர் என் டி ஆரின் முதல் பெரு வெற்றி படமாகும். இவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாகும். ஸ்டூடண்ட் நெம்பர் 1 என்ற பெயரிலேயே இப்படம் தமிழில் எடுக்கப்பட்டது. இவரின் சிம்மாத்திரி என்ற படம் கஜேந்திரா என்று தமிழில் மீண்டும் எடுக்கப்பட்டது. விக்கரமகுடு என்ற படம் தமிழில் சிறுத்தை என மீண்டும் படமாக்கப்பட்டது. மகாதீரா என்ற படம் மாவீரன் என தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

நான் ஈ என்ற படம் இவர் நேரடியாக தெலுங்கிலும் தமிழிலும் இயக்கியதாகும்.

இவரின் அனைத்து படங்களுக்கும் இசை மரகதமணி, படத்தொகுப்பு கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் ஆவார்கள்.

திரைப்பட பட்டியல்[தொகு]

ஆண்டு படங்கள் மொழி குறிப்பு
2001 ஸ்டூடண்ட் நம்பர்.1 தெலுங்கு மொழிமாற்றம் தமிழில் - ஸ்டூடண்ட் நம்பர் 1
2003 சிம்ஹ தெலுங்கு
2004 சை தெலுங்கு
2005 சத்ரபதி தெலுங்கு
2006 விக்ரமற்குடு தெலுங்கு
2007 யமதொங்கா தெலுங்கு
2009 மகதீரா தெலுங்கு
2010 மரியாத ராமன்னா தெலுங்கு
2011 ராஜாண்ண தெலுங்கு ஆக்சன் காட்சிகள் மட்டும் இயக்கம்
2012 நான் ஈ (திரைப்படம்) தெலுங்கு
நான் ஈ (திரைப்படம்) தமிழ்
2015 பாஹுபலி தெலுங்கு
மகாபலி தமிழ்

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. wife name
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜமௌலி&oldid=2085752" இருந்து மீள்விக்கப்பட்டது