காளிதாஸ் (1931 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காளிதாஸ்
காளிதாஸ் பாட்டுப் புத்தகத்தின் முகப்பு
இயக்கம்எச். எம். ரெட்டி
தயாரிப்புஆர்தேசிர் இரானி
நடிப்புபி. ஜி. வெங்கடேசன்
டி. பி. ராஜலட்சுமி
எல். வி. பிரசாத்
தேவாரம் ராஜாம்பாள்
ஜே. சுசீலா
சுசீலா தேவி
எம். எஸ். சந்தானலட்சுமி
வெளியீடுஅக்டோபர் 31, 1931

காளிதாஸ் 1931 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி உள்ளடங்கலாகப் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமாகும்[1].

இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா தயாரித்த அரங்கிலேயே இப்படம் தயாரிக்கப்பட்டது.[2]

இந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாசால் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. இப்படத்தின் மூலம் முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது[3].

பாத்திரங்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

டி. பி. ராஜலட்சுமியும் பி. ஜி. வெங்கடேசனும் தோன்றும் காட்சி

இத்திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஐம்பது பாடல்கள் இடம்பெற்றிருந்தன[4][5] ராட்டினமாம் காந்தி கை பாணமாம்[6][7], இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை[8] போன்ற தேசபத்திப்பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இப்படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியுள்ளார்.

துணுக்குகள்[தொகு]

  • காளிதாஸ் படத்தில் கதாநாயகி வித்தியாதிரி (டி. பி. ராஜலட்சுமி) தமிழில் பேசிப் பாடுகின்றார். அவருக்குக் கதாநாயகன் காளிதாசன் (பி. ஜி. வெங்கடேசன்) தெலுங்கில் மறுமொழி உரைக்கிறார். சில துணை நடிகர்கள் இந்தியிலும் பேசியுள்ளார்கள்.[3].
1931 செப்டம்பர் 29 சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளியான காளிதாஸ் விளம்பரம்
  • இத்திரைப்படத்தின் முதல் காட்சி சென்னை ‘சினிமா சென்டிரல்’ எனும் திரையரங்கில் 1931, அக்டோபர் 31 இல் திரையிடப்பட்டது.
  • அன்றைய சுதேசமித்திரன் நாளிதழில் வெளியான ‘காளிதாஸ்’ பட விளம்பரம் (படம்) இது: ‘தமிழ், தெலுங்கு பாஷையில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படக்காட்சியைக் கேளுங்கள். மிஸ் டி.பி. ராஜலட்சுமி நடிக்கும் ‘காளிதாஸ்’ முழுதும் பேச்சு, பாடல், நடனம் நிறைந்த காட்சி. இம்பீரியல் மூவிடோன் கம்பெனியாரால் தயாரிக்கப்பட்டது. உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள், கொரத்தி நாட்டியங்கள், பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்’.[3]
  • இப்படத்தில் குறவன்-குறத்தி ஆட்டமும் இடம்பெற்றுள்ளது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. கோகுல்சிங், கே.; விமல் திசாநாயக்க (2004). Indian popular cinema: a narrative of cultural change. Trentham Books. பக். 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1858563291. http://books.google.co.in/books?id=_plssuFIar8C&pg=PA24&dq=Ayodhyecha+Raja+1932&cd=10#v=onepage&q=Ayodhyecha%20Raja%201932&f=false. 
  2. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா- அறந்தை நாராயணன்- NCBH-வெளியீடு-1988
  3. 3.0 3.1 3.2 தமிழ் சினிமாவின் முதல் சாதனைப் பெண் : வறுமை துரத்திய ஒரு சாதகப் பறவை!, சோழ.நாகராஜன்
  4. நெல்ம்ஸ், ஜில் (2003). An Introduction to Film Studies (Hardback ). நியூயோர்க்: ரூட்லெட்ஜ். பக். 371. ISBN 0415262690. 
  5. சு. தியடோர் பாஸ்கரன் (1996). The eye of the serpent: an introduction to Tamil cinema. Chennai: East West Books. பக். 42. 
  6. 6.0 6.1 காளிதாஸ் - திரைப்பட விமரிசனம், கல்கி எழுதியது, ஆனந்த விகடன், நவம்பர் 16, 1931
  7. "Music for the people - The Hindu 6 January 2002". Archived from the original on 27 ஜூன் 2003. பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2010. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  8. "Tamilcinema.com". Archived from the original on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2010-12-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிதாஸ்_(1931_திரைப்படம்)&oldid=3880963" இலிருந்து மீள்விக்கப்பட்டது