உள்ளடக்கத்துக்குச் செல்

தெறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தட்டையான தெறி. இதில் தெரியும் இரு சிறு துளைகளும் இந்தத் தெறியை ஆடையில் ஒரு பக்கத்தில் தைத்து பொருத்த உள்ளன.
இங்குள்ள தெறிகள் சில மாழை, நெகிழி, தோல் ஆகியவற்றால் ஆனவை.

தெறி அல்லது பொத்தான் (Button) துணியாடைகளில் இரண்டு ஓரங்களைத் தற்காலிகமாக இணைக்கவோ கழற்றிப் பிரிக்கவோ பயன்படுமாறு உள்ள ஓர் அமைப்பின் ஒரு பகுதி. இது நூலைக் கட்டவோ துளையுள்ள (பொத்தல் உள்ள) துணியின் ஓர் ஓரத்தை மாட்டவும் பயன்படுகிறது. பருப்பு போல தட்டையாகவோ, கொட்டை போல உருண்டையாகவோ பிற வடிவங்களிலோ இருக்கும். இந்தத் தெறியை இணைக்க வேண்டிய இரு ஓரங்கள் கொண்ட துணியின் ஓர் ஓரத்தில் வரிசையாக இடம் விட்டு தைத்துப் பொருத்தி இருப்பார்கள். தெறி துணியின் பொத்தல் (துளை) உடைய பகுதி, மாட்டிக்கொள்ளும் கொழு[1]

தெறிகள் மிகப்பல பொருள்களால் செய்யப்படுகின்றன. பழங்காலத்தில் எலும்பு, மான் கொம்பு, யானைத் தந்தம் முதலியவற்றாலும், தற்காலத்தில் நெகிழி, மாழை, கண்ணாடிப் பொருட்கள், தோல் முதலியவற்றாலும் செய்யப்படுகின்றன. நெகிழிப் பொருட்களே தற்காலத்தில் பெரும்பாலும் பயன்படுகின்றன.

வரலாறு[தொகு]

தெறிகள் அல்லது தெறிகள் போன்ற அமைப்புகள் மிகப் பழங்காலத்திலேயே வழக்கில் இருந்தன. இந்தியாவின் வடமேற்கே இருந்த சிந்துவெளி நாகரிக மக்களும் (கி.மு 2800-2600), பின்னர் வெண்கலக் காலத்திலும் சீனாவில் கி. மு. 2000-1500 காலப்பகுதிகளிலும், பழம் உரோமானியப் பண்பாட்டிலும் தெறிகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

துணியாடைகளில் தற்கால பயன்பாடு போன்ற புழக்கம் டாய்ட்சு லாந்தில் கி.பி. 13 ஆவது நூற்றாண்டில் துவங்கியது[2]. இது பின்னர் இறுக்கமாக ஆடை அணியும் பழக்கத்தில் விரைந்து ஐரோப்பாவில் பரவியது.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. கொழு என்றால் கெட்டியாக உள்ள பற்றுக்கோடு. ஆடு மாடுகளை கயிற்றால் கட்டி வைக்கும் கொழு கொம்பு. இது காறு என்றும் கூறப்படும்.
  2. Lynn White: "The Act of Invention: Causes, Contexts, Continuities and Consequences", Technology and Culture, Vol. 3, No. 4 (Autumn, 1962), pp. 486-500 (497f. & 500)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெறி&oldid=3273091" இலிருந்து மீள்விக்கப்பட்டது