கத்தி (திரைப்படம்)
கத்தி | |
---|---|
இயக்கம் | ஏ. ஆர். முருகதாஸ் |
தயாரிப்பு | ஐங்கரன் இன்டர்நேசனலின் கருணாமூர்த்தி லைகா மொபைலின் சுபாசுகரன் |
கதை | ஏ. ஆர். முருகதாஸ் |
இசை | அனிருத் ரவிச்சந்திரன் |
நடிப்பு | விஜய் சமந்தா |
ஒளிப்பதிவு | ஜார்ஜ் சி வில்லியம்ஸ் |
படத்தொகுப்பு | ஸ்ரீகர் பிரசாத் |
கலையகம் | ஐங்கரன் இன்டர்நேசனல் லைகா புரோடக்சன் |
வெளியீடு | அக்டோபர் 22, 2014 தீபாவளி |
ஓட்டம் | 165 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹ 70 கோடி (ஐஅ$11 மில்லியன்)[1] |
மொத்த வருவாய் | ₹ 130 கோடி |
கத்தி (ⓘ) என்பது இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் கதை, இயக்கத்தில் உருவாகி 2014 ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் நாயகராக விஜய்யும் நாயகியாக சமந்தாவும் நடித்துள்ளனர்[2]. இப்படத்திற்கான படப்பிடிப்பு, 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 3ம் நாள் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது[3][4]. இப்படத்தில் விஜய், இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். விஜய் ஏற்கனவே அழகிய தமிழ்மகன் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்தார்.
நடிகர்கள்
[தொகு]- விஜய் - கதிரேசன் (கதிர்)/ஜிவானந்தம் (ஜீவா தம்பி)[5]
- சமந்தா - அங்கிதா
- தோத்தா ராய் சவுத்ரி - விவேக் பானர்ஜி
- சதீஷ் - ரவி
- நீல் நிதின்
திரைக்கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
- தண்ணீர் இல்லாத காரணத்தால் விவசாயம் அழிவை சந்தித்து வருகிறது. இந்தியா முழுவதும் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால், நம்ம ஊருக்கு வந்து நம்ம தண்ணீரை பாட்டிலில் பேக் பண்ணி விற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பண மழை கொட்டுகிறது! இது அரசு அனுமதியோடு நடந்துவருகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை! கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிபணிந்தது போய், இன்று அரசே அந்த வேலையை செய்யும் ஆபத்தான நிலையை வந்தடைந்திருக்கிறது தமிழகம்.
அதிகார வர்க்கத்தினரை தன் வசம் வைத்திருக்கும் கார்ப்பரேட் முதலைகளின் அசுர பலத்தில், விவசாயிகளின் குரல் கேட்காமலேயே காற்றில் காணாமல் போகிறது. நமக்கு சோறு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிற நாம், நமக்கு சோறு போட்ட விவசாயிகளின் நிலையை எப்போதவது சிந்தித்ததுண்டா? இந்த கேள்வியைத்தான் அனைவருக்கும் கேட்கிற வகையில் கத்தி படத்தில் துணிச்சலோடு ‘கத்தி’ கேட்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!
தன்னூத்து என்கிற கிராமம். தண்ணீர் பஞ்சத்தால் அந்த விவசாய நிலங்களை விற்பதற்கு கிராம வாசிகள் முடிவு செய்கிறார்கள். அந்த ஊரில் பூமிக்கு அடியில் ஓர் ஊற்று இருப்பதாகவும், அதனால் தான் அந்த கிராமத்திற்கு தன்னூத்து என்கிற பெயர் வந்ததாகவும், ஊற்று இருக்கிற இடத்தை கண்டுபிடித்துவிட்டால் சுற்றியிருக்கிற இரண்டு மாவட்டத்தின் தண்ணீர் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று சொல்லும் விஜய் (ஜீவானந்தம்), தான் அந்த இடத்தை கண்டுபிடித்துத் தருகிறேன் என்று சொல்லி அதற்கான வேலைகளைத் தொடங்குகிறார்.
ஊற்று ஓடுகிற இடத்தை ஜீவானந்தம் கண்டுபிடித்த அடுத்த நொடி, தன் இராட்சத கால்களை பதித்து அந்த இடத்திற்கு வேலி போடுகிறது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். அதை எதிர்த்து கேள்வி கேட்கும் ஜீவானந்தத்தை போலிஸ் கைது செய்கிறது. என்ன செய்வதென்று தவித்து போகும் அந்த கிராம மக்களின் குரல் உலகத்துக்கு கேட்காமலே போகிறது. உலகத்தின் கவனத்தை தங்களின் கிராம வசம் திருப்ப அந்த கிராமத்தை சேர்ந்த ஏழு பேர் ஒரே நாளில் தங்களின் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
பிரச்சனை பெரிய அளவில் வெடிக்கிறது. அந்த இடம் சீல் வைக்கப்படுகிறது. இனி தான் தொடங்குகிறது நீதிக்கும், அநீதிக்குமான போராட்டம். தன் சொந்த கிராமத்தை மீட்க ஜீவானந்தம் எடுக்கும் முயற்சிகளையும், அவரைப் போலவே இருக்கும் இன்னொரு விஜய்யான கதிரேசன் எப்படி உள்ளே வந்தார் என்பதுதான் இப்படத்தின் திரைக்கதை
இசை
[தொகு]இப்படத்திற்கு வளர்ந்து வரும் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார் .ஐந்து பாடல்கள் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'Kaththi' mints Rs.15.4 crore on release day". டெக்கன் ஹெரால்டு. 29 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 24 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "கத்தி திரைப்பட நடிகை நடிகர்கள்". Sify.com. பார்க்கப்பட்ட நாள் 4 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "விஜய். ஏ. ஆர், முருகதாஸ் திரைப்படம் இன்று துவக்கம்". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 4 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Features, Express. "விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்". The New Indian Express. Archived from the original on 2014-03-03. பார்க்கப்பட்ட நாள் 4 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "விஜய் - சமந்தா நடிக்கும் கத்தி திரைப்படம் கதை" (in தமிழ்). tamilstar.com. 6 மே 2014. Archived from the original on 9 மே 2014. பார்க்கப்பட்ட நாள் சூலை 7, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)CS1 maint: unrecognized language (link)
வெளி இணைப்புகள்
[தொகு]- Kaththi review: Beneath the flab, some solid masala moments - ஒரு திரை விமர்சனம் (ஆங்கிலத்தில்)