அழகிய தமிழ்மகன் (Azhagiya Tamizh Magan) என்பது 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் பரதனின் இயக்கத்திலும் எசு. கே. சீவாவின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது[2] இத்திரைப்படத்தில் விசய் முதன்முறையாக இரட்டை வேடங்களின் நடிக்கிறார் .[3]
இத்திரைப்படம் நவம்பர் 8, 2007இல் வெளியிடப்பட்டது.[4] இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் மகா முதுரு என்ற பெயரிலும் இந்தி மொழியில் சப்சே படா கில்லாடி என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது.