நடபைரவி
நடபைரவி கருநாடக இசையின் 20 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 20 வது இராகத்தின் பெயர் நாரீரீதிகௌள. இந்துஸ்தானி இராகத்தில் இதற்கு ஈடானது அசாவேரி தாட்.
இலக்கணம்[தொகு]
ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம1 ப த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம1 க2 ரி2 ஸ |
- வேத என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 2 வது இராகம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- ரி, நி ஆகிய சுரங்கள் தீர்க்கமாக இசைக்கப்படுகின்றன.
சிறப்பு அம்சங்கள்[தொகு]
- இதன் க, ம, ப, த, நி முறையே கிரக பேதத்தின் வழியாக சங்கராபரணம் (29), கரகரப்பிரியா (22), தோடி (08), மேசகல்யாணி (65), ஹரிகாம்போஜி (28) ஆகிய மேளங்களைக் கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் சண்முகப்பிரியா (56) ஆகும்.
- இதன் காந்தாரத்தை அந்தர காந்தாரமாக மாற்றினால் இராகம் சாருகேசி (26) ஆகும்.
- ஐரோப்பிய இசையிலும், கிரேக்க இசையிலும் இதற்கு ஈடான இசை அமைப்பு இருப்பதாக அறியவருகிறது.
- இந்த இராகம் மேலைத்தேய இசையின் Natural Minor Scale இற்கு இணையானது.
உருப்படிகள்[1][தொகு]
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | பருலசேவா | இராமனாதபுரம் சீனிவாச ஐயங்கார் | ரூபகம் |
கிருதி | ஸ்ரீ வள்ளி தேவசேனாபதே | பாபநாசம் சிவன் | ஆதி |
கிருதி | எண்ணுவதெல்லாம் | பெரியசாமி தூரன் | ஆதி |
கிருதி | அம்போருகபாதமே | கோடீஸ்வர ஐயர் | ரூபகம் |
கிருதி | ஐயனே நடனமாடிய | முத்துத் தாண்டவர் | மிஸ்ர ஜம்பை |
கிருதி | நீ பாதமுலனு | முத்தையா பாகவதர் | ஆதி |
பதம் | கையுடன் கூட்டிவாடி | மாயூரம் விஸ்வநாத சாஸ்திரி | ஆதி |
ஜன்ய இராகங்கள்[தொகு]
நடபைரவியின் ஜன்ய இராகங்கள் இவை.
- பைரவி
- ஆனந்தபைரவி
- ஜயந்தசிறீ
- சாரமதி
- பூர்ணஷட்ஜம்
- இந்தோளம்
- மாஞ்சி
- மார்க்கஹிந்தோளம்
- அமிர்தவாஹினி
- சுத்ததெசி
- ஜிங்களா
- ஹிந்தோளவசந்தம்
- கோபிகாவசந்தம்
- கமலாதரங்கிணி
- திவ்யகாந்தாரி
- புவனகாந்தாரி
- சுத்தரஜ்ஜணி
- சுத்தசாளவி
- நவரசச்சந்திரிகா
- கோமேதகப்பிரியா
- பாகீரதி
- ரதிபதிப்பிரியா
திரையிசைப் பாடல்கள்[தொகு]
நடபைரவி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:
- அம்மாவும் நீயே அப்பாவும் நீயே :- களத்தூர் கண்ணம்மா
- திருக்கோயில் வாசலில் :- முத்து
- வசீகரா :- மின்னலே
மேற்கோள்கள்[தொகு]
- ↑ டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.