சிம்மேந்திரமத்திமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிம்மேந்திரமத்திமம் கருநாடக இசையின் 57வது மேளகர்த்தா இராகம். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்த இராகத்தின் ஜன்யமான (வழி இராகமாகிய) ஸூமத்யுதி அசம்பூர்ண மேள பத்ததியில் 57வது இராகமாக விளங்குகிறது.

இலக்கணம்[தொகு]

சிம்மேந்திரமத்திமம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி222 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம22 ரி2
 • "திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 3வது மேளம்.
 • இந்த இராகத்தில் ஷட்ஜம் (ஸ), சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
 • முக்கிய பிரதி மத்திம இராகங்களில் இதுவும் ஒன்று.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

 • கருணைச் சுவையை வெளிப் படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
 • பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைத் தருகிறது.
 • 21வது மேளமாகிய கீரவாணியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
 • மூர்ச்சனாகாரக மேளம். இதன் பஞ்சம, தைவத மூர்ச்சனைகள் முறையே மாயாமாளவகௌளை (15), ரசிகப்பிரியா (72) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
 • ஐரோப்பிய ஹங்கேரி நாட்டின் இசையிலும், நாடோடி இனத்தாரின் இசையிலும் இந்த இராகம் ஒலிக்கிறது.

உருப்படிகள்[தொகு]

ஜன்ய இராகங்கள்[தொகு]

சிம்மேந்திரமத்திமத்தின் ஜன்ய இராகங்கள் இவை.

திரை இசைப் பாடல்கள்[தொகு]

 • "எல்லாம் இன்ப மயம்" (மணமகள்)
 • "ஆடாத மனமும் உண்டோ" (மன்னாதி மன்னன்)
 • "ஆனந்த ராகம்" (பன்னீர் புஷ்பங்கள்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்மேந்திரமத்திமம்&oldid=1344544" இருந்து மீள்விக்கப்பட்டது