சண்முகப்பிரியா
Jump to navigation
Jump to search
சண்முகப்பிரியா கருநாடக இசையின் 56வது மேளகர்த்தா இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்த இராகத்தின் தோற்றமான (ஜன்யமான) சாமரம் அசம்பூர்ண மேள பத்ததியில் 56 வது இராகமாக விளங்குகிறது.
இலக்கணம்[தொகு]
ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம2 ப த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம2 க2 ரி2 ஸ |
- திசி என்றழைக்கப்படும் 10வது சக்கரத்தில் 2வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- முக்கிய பிரதி மத்திம இராகங்களில் இதுவும் ஒன்று.
சிறப்பு அம்சங்கள்[தொகு]
- பக்திச் சுவையை வெளிப்படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
- 20வது மேளமாகிய நடபைரவியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
- பிரத்தியாகத கமகம் இந்த இராகத்தின் சாயலை நன்கு வெளிப்படுத்தும்.
- மூர்ச்சனாகாரக மேளம். இதன் க, ப, த கிரக பேதத்தின் வழியாக முறையே சூலினி (35), தேனுகா (09), சித்ராம்பரி (66) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
உருப்படிகள்[தொகு]
- கிருதி : வத்தனே வாரு : ஆதி : தியாகராஜ சுவாமிகள்.
- கிருதி : சித்தி விநாயகம் : ரூபகம் : முத்துசாமி தீட்சிதர்.
- கிருதி : அரகர சிவ : ஆதி : முத்துத் தாண்டவர்.
- கிருதி : சுகமே சுகம் : ஆதி : கோடீஸ்வர ஐயர்.
- கிருதி : பார்வதி நாயகனே : ஆதி : பாபநாசம் சிவன்.
ஜன்ய இராகங்கள்[தொகு]
சண்முகப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.
- பிரிமரசாரங்க
- நாகபிரபாவளி
- கமலநாராயணி
- திருமூர்த்தி
- வசீரி
- ஹம்சகீர்வாணி
- கோபிகாதிலகம்
- சுமநீசரஞ்சனி
- வசுகெற்ப
- பாவுகதாயினி
திரையிசைப் பாடல்கள்[தொகு]
சண்முகப்பிரியா இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:
- பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா - திருவிளையாடல்[1]
- மறைந்திருந்து பார்க்கும் - தில்லானா மோகனாம்பாள்
- சொல்லாயோ வாய் திறந்து - மோகமுள்
- கண்ணுக்குள் நூறு நிலவா - வேதம் புதிது
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Charulatha Mani. "A Raga's Journey - Sacred Shanmukhapriya". தி இந்து. 27 பிப்ரவரி 2017 அன்று பார்க்கப்பட்டது.