ரகுப்பிரியா
Appearance
ரகுப்பிரியா கருநாடக இசையின் 42வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 42வது இராகத்திற்கு ரவிகிரியா என்ற பெயர்.
இலக்கணம்
[தொகு]ஆரோகணம்: | ஸ ரி1 க1 ம2 ப த3 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த3 ப ம2 க1 ரி1 ஸ |
- ரிஷி என்றழைக்கப்படும் 7வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 வது மேளம்.
- இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.
- இது ஒரு விவாதி மேளம்.
- இதன் மத்திமத்தை சுத்த மத்திமாக மாற்றினால் இராகம் தானரூபி (06) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
உருப்படிகள்
[தொகு]வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | ஹிமகிரி குமாரி | முத்துசுவாமி தீட்சிதர் | ஆதி |
கிருதி | சதானந்த | கோடீஸ்வர ஐயர் | ரூபகம் |