ரத்னாங்கி
Jump to navigation
Jump to search
ரத்னாங்கி கருநாடக இசையின் 2 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 2வது இராகத்திற்கு பேனத்யுதி என்ற பெயர் உன்டு.
இலக்கணம்[தொகு]
ஆரோகணம்: | ஸ ரி1 க1 ம1 ப த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம1 க1 ரி1 ஸ |
- இந்து என்றழைக்கப்படும் முதல் வட்டத்தில் (சக்கரத்தில்) 2வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்[தொகு]
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் ஜலார்ணவம் (38) ஆகும்.
- இதன் ரிஷப, மத்திம சுரங்கள் முறையே கிரக பேதத்தின் வழியாக கமனச்ரம (53), ஜங்காரத்வனி (19) ஆகிய மேளங்களைக் கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
- இந்த மேளத்தில் சில ஜன்ய இராகங்கள் உண்டு.
உருப்படிகள்[தொகு]
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | சிறீ தக்ஷிணாமூர்த்திம் | முத்துசுவாமி தீட்சிதர் | ஆதி |
கிருதி | தருனம் இதே | கோடீஸ்வர ஐயர் | ஆதி |