ஏறுவரிசை, இறங்குவரிசை
Appearance
(ஆரோகணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஏறுவரிசை
[தொகு]ஏறுவரிசை (ஆரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் சுருதியில் முறையே உயர்ந்து கொண்டு போகும் சுரங்களையுடைய ஒரு தொடராகும். இதனை ஆரோஹி, ஏற்றம், ஆரோசை, ஏறுவரிசை, ஆர்முடுகல், ஏறுநிரை அல்லது ஏறுநிரல் என்றும் சொல்வதுண்டு.
உதாரணம்: ஸ ரி க ம ப த நி ஸ்
இறங்குவரிசை
[தொகு]இறங்குவரிசை (அவரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் (ஏழுசுரங்கள்) சுருதியில் முறையே குறைந்து கொண்டு போகும் சுரங்களை உடைய ஒரு தொடராகும். இதனை இறக்கம், அவரோஹி, அமரோசை, அமர்முடுகல், இறங்குநிரை அல்லது இறங்குநிரல் என்றும் சொல்வதுண்டு.
உதாரணம்: ஸ் நி த ப ம க ரி ஸ