உள்ளடக்கத்துக்குச் செல்

சுருதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுருதி (சமற்கிருதம்: श्रुति) எனப்படுவது சுவரத்தைத் தொடங்குவதற்கு அடிப்படையான ஒலியமைப்பு ஆகும். இது கேள்வி என்றும் சொல்லப்படும். நாதத்திலிருந்து சுருதி உற்பத்தியாகின்றது.

முக்கியத்துவம்

[தொகு]

நாம் பாடுவதற்கு மத்யஸ்தாயி ஸட்ஜத்தையே ஆதாரமாகக் கொள்வதனால் அதனையே சுருதி என்கிறோம். சுருதி சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு மிகப் பிரதானமாக இருப்பதனால் சுருதியைத் தாய் என்றும் லயத்தைத் தந்தை என்றும் சொல்வர்.

வகைகள்

[தொகு]

சுருதி இரு வகைப்படும். அவையாவன:

  1. பஞ்சம சுருதி - இது மத்யஸ்தாயி ஷட்ஜத்தை ஆதாரமாகக் கொண்டு பாடுவது;
  2. மத்திம சுருதி - இது மத்யஸ்தாயி மத்திமத்தை ஆதாரமாகக் கொண்டு பாடுவது.

சாதாரணமாகப் பாட்டுகள் எல்லாம் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது. நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்களும் தாரஸ்தாயி ஷட்ஜத்திற்குட்பட்ட சிறுவர் பாடல்களும் மத்திம சுருதியில் பாடப்படுகின்றன. நாம் சாதாரணமாகச் சுருதி சேர்க்கும் பொழுது சா-பா-சா-பா என்ற முறையில் சேர்க்கிறோம்.

சுருதிக்குப் பயன்படும் கருவிகள்

[தொகு]

சுருதிக்குப் பயன்படும் கருவிகளுள் தலைசிறந்தது தம்பூரா ஆகும். இன்று இலத்திரனியல் சுருதிப்பெட்டியும் அரங்கிசையில் இடம்பெற ஆரம்பித்துள்ளது.

சுருதி மற்றும் அதன் அதிர்வெண்கள் (இந்துஸ்தான் இசையில் கூறியவாறு)

[தொகு]
சுருதி பெயர் ஸ்வரம் விகிதாச்சாரம் சுருதி அதிர்வெண்
க்ஷோபீனி ஷட்ஜா 1 466.1638
திவ்ற கோமல் ரிஷப் 256/243 491.1026
கும்தாவதி 16/15 497.2414
மண்ட 10/9 517.9598
சந்தோவதி ஷுத்த ரிஷப் 9/8 524.4343
தயாவந்தி கோமல் கந்தர் 32/27 552.4904
ரஞ்சனி 6/5 559.3966
ரக்திகா 5/4 582.7048
ருத்ரி ஷுத்த கந்தர் 81/64 589.9886
குரோதி ஷுத்த மத்யம் 4/3 621.5517
வஜ்ரிக 27/20 629.3211
பிரசரிணி திவ்ற மத்யம் 45/32 655.5428
ப்ரிதி 729/512 663.7371
மர்ஜானி பஞ்சம் 3/2 699.2457
க்ஷிதி கோமல் தைவத் 128/81 736.6539
ரக்த 8/5 745.8621
சண்டிபிணி 5/3 776.9397
அளபினி ஷுத்த தைவத் 27/16 786.6514
மட்னி கோமல் நிஷாத் 16/9 828.7356
ரோகினி 9/5 839.0948
ரம்யா 15/8 874.0571
உக்ர ஷுத்த நிஷாத் 243/128 884.9828
க்ஷோபீனி ஷட்ஜா 2 932.3276
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருதி&oldid=3205399" இலிருந்து மீள்விக்கப்பட்டது