பவப்பிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பவப்பிரியா கருநாடக இசையின் 44 வது மேளகர்த்தா இராகமாகும். இந்த மேளத்தின் ஜன்யமான பவானி என்ற இராகம், அசம்பூர்ண மேள பத்ததியில் 44 வது மேளமாகக் கையாளப்படுகிறது.

இலக்கணம்[தொகு]

பவப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி122 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம22 ரி1
  • வசு எனப்படும் 8வது சக்கரத்தில் 2வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க2), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதர அம்சங்கள்[தொகு]

  • திரிஸ்தாயி இராகம். கருணை சுவையை வெளிப்படுத்தும் இராகம்.
  • விவாதி மேளம் (பகை ஸ்வரங்களைக் கொண்ட மேளம்).
  • இது தோடி (ஹனுமத்தோடி) இராகத்தின் நேர் பிரதி மத்திம இராகம் ஆகும்.
  • இந்த இராகத்தின் காந்தாரமும், தைவதமும் கிரகபேதத்தின் வழியாக வாகதீச்வரி (34) மேளத்தையும், நாகாநந்தினி (30) மேளத்தையும் தோற்றுவிக்கின்றன.

உருப்படிகள்[தொகு]

ஜன்ய இராகங்கள்[தொகு]

பவப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவப்பிரியா&oldid=2079036" இருந்து மீள்விக்கப்பட்டது