உள்ளடக்கத்துக்குச் செல்

காமவர்த்தனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காமவர்த்தனி கருநாடக இசையின் 51 வது மேளகர்த்தா இராகம். இவ்விராகமே பந்துவராளி என்றும் அழைக்கப்படுகின்றது. அசம்பூர்ன மேள பத்ததியில் காசிராமக்கிரியா என்றழைக்கப்பட்டது. இந்துஸ்தானி இசையில் பூர்வி தாட் என்று பெயர்.

இலக்கணம்

[தொகு]
காமவர்த்தனி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி132 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம23 ரி1
  • பிரம்ம எனப்ப்டும் 9 வது சக்கரத்தில் 3 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகிறன.

சிறப்பு அம்சங்கள்

[தொகு]
  • இது ஒரு பழமையான இராகம்.
  • காந்தாரத்தை அசைக்காமல் பாட வேன்டும்.
  • கருணைச் சுவையை வெளிப்படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
  • தாரச்தாயி காந்தாரத்திற்கு மேல் சஞ்சாரம் காண்பதரிது.
  • ஜண்டசுர வரிசைப் பிரயோகங்கள், தாட்டு சுரப்பிரயோகங்கள், பிரத்தியாகத கமகங்கள் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றன.
  • பண்டைத்தமிழிசையில் "சாதாரிப்பண்" என்றழைக்கப்பட்டது. "நட்டராகம்" என்றும் அழைக்கப்பட்டது.[1]
  • மாயாமாளவகௌளையின் நேர் பிரதி மத்திம இராகம் ஆகும்.
  • மூர்ச்சனாகாரக மேளம். இந்த இராகத்தின் நிஷாத மூர்ச்சனை கனகாங்கி என்ற முதல் மேளமாகும்.

உருப்படிகள்

[தொகு]

ஜன்ய இராகங்கள்

[தொகு]

காமவர்த்தனியின் ஜன்ய இராகங்கள் இவை.

திரையிசைப் பாடல்கள்

[தொகு]

காமவர்த்தனி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்:

மேற்கோள்கள்

[தொகு]
  1. அ. கி. மூர்த்தி (1998). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 161.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமவர்த்தனி&oldid=3830653" இலிருந்து மீள்விக்கப்பட்டது