காயகப்பிரியா
Appearance
காயகப்பிரியா கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 13வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு கேயஹெஜ்ஜஜ்ஜி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[1][2][3]
இலக்கணம்
[தொகு]ஆரோகணம்: | ஸ ரி1 க3 ம1 ப த1 நி1 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி1 த1 ப ம1 க3 ரி1 ஸ |
- இது அக்னி என்றழைக்கப்படும் 3வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
[தொகு]- இது ஒரு விவாதி மேளம்.
- நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடாத ராகம்.
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் தவளாம்பரி (49) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரிஷப சுரம் முறையே தாதுவர்த்தனி (69) மேளம் தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம்).
உருப்படிகள்
[தொகு]வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | ஸ்ரீ மஹாவிஷ்ணும் | மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா | கண்ட ஜம்ப |