மாயாமாளவகௌளை
Appearance
மாயாமாளவகௌளை என்பது கருணை, பக்தி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இராகம் ஆகும். கருநாடக இசையின் 15 வது மேளகர்த்தா எப்போதும் பாடத்தகுந்த இராகம். இந்துஸ்தானி இசையில் இதற்கு பைரவ தாட் எனப் பெயர்.
இலக்கணம்
[தொகு]![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2d/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B3%E0%AF%88.svg/250px-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B3%E0%AF%88.svg.png)
ஆரோகணம்: | ஸ ரி1 க3 ம1 ப த1 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த1 ப ம1 க3 ரி1 ஸ |
- அக்னி என அழைக்கப்படும் 3 வது வட்டத்தில் (சக்கரத்தில்) 3 வது மேளம்.
- இந்த இராகத்தின் பழைய பெயர் மாளவகௌளை ஆகும். கடபயாதி திட்டத்திற்காக மாயாமாளவகௌளை என நீட்டப்பட்டுள்ளது.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
[தொகு]- 2 பெயர்களை உடைய ஸ்வரஸ்தானங்கள் இந்த இராகத்தில் வராததாலும், ஜண்டை ஸ்வர்க்கோர்வைகள், தாட்டு ஸ்வரக்கோர்வைகள் மற்றும் துரித கால, சௌக்க காலக் கோர்வைகள் இந்த இராகத்திற்குப் பொருத்தமாக வருவதாலும் மாணவ மாணவியர் முதன் முதலில் பயிற்சி செய்ய வேண்டிய வரிசைகளை இந்த இராகத்தில் நம் முன்னோர்கள் இயற்றியுள்ளனர்.
- பல ஜன்ய இராகங்களை உடைய பழமையான மேளம்.
- இதன் எண்ணை (15) திருப்பிப் போட்டால் இதன் நேர் பிரதி மத்திம மேளமாகிய காமவர்த்தனியின் எண் (51) வரும்.
- இதன் ரி, ம முறையே கிரக பேதத்தின் வழியாக ரசிகப்பிரியா (72), சிம்மேந்திரமத்திமம் (57) மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கீதம் | கணநாதா | பொன்னையாபிள்ளை | திஸ்ரஏகம் |
கிருதி | துளசிதள முலசே | தியாகராஜ சுவாமிகள் | ரூபகம் |
கிருதி | விதுலகும்ரொக்கெதா | தியாகராஜ சுவாமிகள் | ஆதி |
கிருதி | மேருசமான | தியாகராஜ சுவாமிகள் | மத்தியாதி |
கிருதி | ஆடிக்கொண்டார் | முத்துத் தாண்டவர் | ஆதி |
கிருதி | ஸ்ரீநாதாதி | முத்துசுவாமி தீட்சிதர் | ஆதி |
கிருதி | தேவ தேவ | சுவாதித் திருநாள் ராம வர்மா | ரூபகம் |
கிருதி | நான் என் செய்வேன் | கோடீஸ்வர ஐயர் | ஆதி |
கிருதி | தேவாதிதேவ | மைசூர் சதாசிவராயர் | ரூபகம் |
கிருதி | கணபதியே | பெரியசாமித் தூரன் | ரூபகம் |
கீதம் | ரவிகோடிதேஜ | வெங்கடமகி | மட்டியம் |
ஜன்ய இராகங்கள்
[தொகு]மாயாமாளவகௌளையின் ஜன்ய இராகங்கள் இவை.
- பரசு
- சாவேரி
- கௌளிபந்து
- நாதநாமக்கிரியா
- பௌளி
- மலஹரி
- கௌளை
- ரேவகுப்தி
- ஜகன்மோகினி
- குர்ஜரி
- மேச்சபௌளி
- சிந்துராமக்கிரியா
- பூரணபஞ்சமம்
- குண்டக்கிரியா
- மேகரஞ்சனி
- கௌரி
- மித்திரகிரணி
- லலிதகௌரி
- கிருஷ்ணவேணி
- நேப்பாளகௌள
- பாஞ்சாலி
- ருக்மாம்பரி
- மதராங்கப்பிரியா
- கோபிகாகுசும
- தாரவம்
- கரக
- பாவினி
திரையிசைப் பாடல்கள்
[தொகு]மாயாமாளவகௌளை இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள் இவை.
- மாசறு பொன்னே - தேவர்மகன்
- இதழில் கதை எழுதும் நேரமிது :- உன்னால் முடியும் தம்பி
- அல்லா உன் ஆணைப்படி
- பூங்கதவே தாழ் திறவாய் :- நிழல்கள்
- கல்லெல்லாம் மாணிக்க கல் ஆகுமா
- மருத மரிக்கொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன்
- நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ - திருநீலகண்டர்
- அந்தப்புரத்தில் ஒரு மகராணி - தீபம்
- சொல்லாயோ சோலைக்கிளி - அல்லி அர்ஜுனா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
வெளியிணைப்புகள்
[தொகு]- Ragam Mayamalavagaula - டி. எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி