உள்ளடக்கத்துக்குச் செல்

கௌளிபந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கௌளிபந்து பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

[தொகு]

இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), காகலி நிசாதம் (நி3), சுத்த தைவதம் (த1), அந்தர காந்தாரம் (க3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்:ச ரி11 ப நி3 ச்
அவரோகணம்:ச் நி31 ப ம1113 ரி1

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் எல்லாச் சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம் என்பர்.

உருப்படிகள்[1]

[தொகு]
வகைஉருப்படிஇயற்றியவர்தாளம்
கிருதிதெரதீயகராதாதியாகராஜ சுவாமிகள்ஆதி
கிருதிநமக்கினிகோபாலகிருஷ்ண பாரதியார்ஆதி
கிருதிஜெகன்னாதாவேதநாயகம் பிள்ளைஆதி
கிருதிதருணமீதம்மாசியாமா சாஸ்திரி ஆதி
கிருதிஅம்பா உனைகவிகுஞ்சர பாரதியார்மிச்ர சாபு
கிருதிபரபிரம்மஅருணாசல கவிராயர்மிச்ர சாபு
கிருதிஎந்த பாபிதியாகராஜ சுவாமிகள்மிச்ர சாபு
கிருதிஅனந்த பத்மநாபாசுவாதித் திருநாள் ராம வர்மாமிச்ர சாபு
கிருதிகிருஷ்ணானந்தமுத்துசுவாமி தீட்சிதர்மிச்ர ஏகம்


இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌளிபந்து&oldid=1305298" இலிருந்து மீள்விக்கப்பட்டது