ரிசபவிலாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரிசபவிலாசா முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப1),சுத்த தைவதம் (த1) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி11 ப த1
அவரோகணம்: ச த1 ப ம1 ரி11 ரி1

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர். அவரோகணத்தில் மத்திமம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர ராகம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிசபவிலாசா&oldid=1325747" இருந்து மீள்விக்கப்பட்டது