ஆனந்தபைரவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆனந்தபைரவி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின் ஜன்னிய இராகம் ஆகும். இந்த இராகம் இந்தியாவின் நாட்டுப்புற பாடல்களில் பிரபலமானது. பண்டைய தமிழிசைப் பண்களில் திருவிசைப்பா என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.[1]

இலக்கணம்[தொகு]

ஆரோகணம்: ஸ க2 ரி221 ப த1 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம12 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு ஸம்பூர்ண இராகம் என்றாலும் ஒரு மேளகர்தா இராகம் ஆகாது, ஏனெனில் இதில் வக்ர ஆரோகணம் உள்ளது.
  • இது ஒரு பாஷாங்க இராகம். இன்த இராகத்தில் மூன்று அன்னிய சுரங்கள் வருகின்றன. இவை ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் வரவில்லை, ஆனால் சில பிரயோகங்களில் வருகின்றன.

உருப்படிகள்[தொகு]

  1. சியாமா சாஸ்திரிகள் இந்த இராகத்தில் நிறைய உருப்படிகள் இயற்றினார். அவர் இந்த இராகத்தை தற்போதய உருவிற்கு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
கிருதி கலைஞர்
மரிவேரே கதி சியாமா சாஸ்திரிகள்
ஓ ஜகதம்பா சியாமா சாஸ்திரிகள்
மானஸ குருகுஹ முத்துசாமி தீட்சிதர்
தியாகராஜ யோக வைபவம் முத்துசாமி தீட்சிதர் (தியாகராஜ சுவாமிகளை போற்றி)
ஸாமகாண ப்ரியே பெரியசாமி தூரன்

ஆனந்தபைரவி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்[தொகு]

  1. கொஞ்சநாள் பொறு தலைவா :- ஆசை
  2. போய்வா மகளே :- கர்ணன்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. அ. கி. மூர்த்தி (1998) (in தமிழ்). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். பக். 161. https://ta.wikisource.org/s/4u7c. 

வெளியிணைப்புக்கள்[தொகு]

  • Raga Anandabhairavi - டி. எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தபைரவி&oldid=2971942" இருந்து மீள்விக்கப்பட்டது