தேவகாந்தாரி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தேவகாந்தாரி இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்[தொகு]

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1) பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச ரி2 க3 ரி2 ம1 ப த2 நி3 ச் |
அவரோகணம்: | ச் நி3 த2. ப ம1 க3 ரி2. ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமைந்திருப்பதால் இது ஒரு சம்பூர்ண இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூரண" இராகம் என்பர். ஆரோகணத்தில் ரிசபம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.