சாவேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாவேரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ- சம்பூர்ண இராகம் ஆகும். பழைமையான இவ்விராகம் கருணைச் சுவையை வெளிப்படுத்தும்.

இலக்கணம்[தொகு]

சாவேரி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
சாவேரி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி11 ப த1 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம13 ரி1
 • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதர அம்சங்கள்[தொகு]

 • பல்லவி சேஷய்யர் இந்த இராகத்தை எட்டு மணித்தியால நேரம் பாடியதாக சொல்லப்படுகின்றது
 • பஞ்சம வர்ஜ சுரக்கோர்வைகளும், தாட்டு சுரக்கோர்வைகளும் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றன.

உருப்படிகள்[1][தொகு]

 1. வர்ணம்: "ஸரஸூட" - ஆதி - கொத்தவாசல் வெங்கடராமய்யர்
 2. கிருதி : "ஸ்ரீராஜகோபால" - ஆதி - முத்துசுவாமி தீட்சிதர்
 3. கிருதி : "சம்கரி சம்குரு" - ரூபகம் - சியாமா சாஸ்திரிகள்
 4. கிருதி : "முருகா முருகா" - மிஸ்ரசாபு - பெரியசாமி தூரன்
 5. கிருதி : "தரிதாபுலேக" - ஆதி - தியாகராஜர்.
 6. கிருதி : "ராமபாண" - ஆதி - தியாகராஜர்
 7. கிருதி : "துளசிஜகத்ஜனனி " - ரூபகம் - தியாகராஜர்
 8. கிருதி : "எந்த நேர்ச்சின" - ஆதி - பட்டணம் சுப்பிரமணிய ஐயர்
 9. கிருதி : "ஸ்ரீகாமகோடி பீட ஸ்திதே" - ஆதி - மைசூர் சதாசிவராயர்
 10. கிருதி : "நானே முழுதும்" - ரூபகம் - முத்துத் தாண்டவர்
 11. கிருதி : "வர்மமா என்மீதில்" - ரூபகம் - ஆனை-ஐயா
 12. பதம் : "ஏமா தெலியது" - திரிபுடை - சேத்ரக்ஞர்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவேரி&oldid=1384293" இலிருந்து மீள்விக்கப்பட்டது