சேனாவதி
Appearance
சேனாவதி கருநாடக இசையின் 7வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 7வது இராகம் சேனாகிரிணி.[1][2][3]
இலக்கணம்
[தொகு]ஆரோகணம்: | ஸ ரி1 க2 ம1 ப த1 நி1 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி1 த1 ப ம1 க2 ரி1 ஸ |
- 72 மேளகர்த்தா திட்டத்தில் 7வது மேளம்.
- இது நேத்ர என்றழைக்கப்படும் 2வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
[தொகு]- இது ஒரு விவாதி மேளம்.
- நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடாத ராகம்.
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் கவாம்போதி (43) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரிஷப, தைவத சுரம் முறையே லதாங்கி (63), சூர்யகாந்தம் (17) மேளம் தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம்).
உருப்படிகள்
[தொகு]- கிருதி: ஞானாம்பிகே பாளயமாம், முத்துசாமி தீட்சிதர், திஸ்ர ஏக தாளம்