உள்ளடக்கத்துக்குச் செல்

தர்மவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்மவதி கருநாடக இசையின் 59வது மேளகர்த்தா இராகமாகும். எப்பொழுதும் பாடக்கூடிய இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு தாமவதி என்று பெயர்.

இலக்கணம்[தொகு]

தர்மவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி222 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம22 ரி2
  • "திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 5 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

  • பிரத்தியாகத கமக சஞ்சாரங்களும், தாட்டு சுரப்பிரயோகங்களும் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றன.
  • நிஷாதம் நன்கு தீர்க்கமாகவும், கமகமாகவும் பிடிக்கப்படுகின்றது.
  • 23வது மேளமாகிய கௌரிமனோகரியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
  • மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரிஷப, பஞ்சம மூர்ச்சனைகள் முறையே சக்ரவாகம் (16), சரசாங்கி (27) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.

உருப்படிகள்[தொகு]

ஜன்ய இராகங்கள்[தொகு]

தர்மவதியின் ஜன்ய இராகங்கள் கீழ் வருமாறு.

திரையிசைப் பாடல்கள்[தொகு]

தர்மவதி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:

  • உனை தினம் எதிர்பார்த்தேன் :- காதலுடன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மவதி&oldid=1344641" இலிருந்து மீள்விக்கப்பட்டது