தானரூபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தானரூபி கருநாடக இசையின் 6 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 6 வது இராகத்திற்கு தனுகீர்த்தி என்ற பெயர்.

இலக்கணம்[தொகு]

தானரூபி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி111 ப த3 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி33 ப ம11 ரி1
  • இந்து என்று அழைக்கப்படும் முதல் வட்டத்தில் (சக்கரத்தில்) 6 வது மேளம்.
  • இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

  • இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் ரகுப்பிரியா (42) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
  • ஜன்ய இராகங்கள் கிடையாது.

உருப்படிகள்[தொகு]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி சிதம்பர நடராஜமூர்த்திம் முத்துசுவாமி தீட்சிதர் மிச்ர ஏக
கிருதி வா வேலவா வா கோடீஸ்வர ஐயர் ஜம்ப
கிருதி சிறீ ராமா ஸதா பஜேஹம் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ஆதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானரூபி&oldid=1351639" இருந்து மீள்விக்கப்பட்டது