சாருகேசி
Appearance
சாருகேசி கருநாடக இசையின் 26வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த இராகத்தின் பெயர் தரங்கிணி.[1][2]
இலக்கணம்
[தொகு]ஆரோகணம்: | ஸ ரி2 க3 ம1 ப த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம1 க3 ரி2 ஸ |
- பாண என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தின் 2 வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
[தொகு]- சர்வஸ்வர கமக வரிக இராகம்.
- பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றது.
- கருணைச்சுவை நிரம்பியது. எப்பொழுதும் பாடலாம்.
- இதன் பூர்வாங்கம் சங்கராபரணத்தைப் போன்றும், உத்தராங்கம் தோடியைப் போன்றும் இருப்பது கவனிக்கத்தக்கது.
- மூர்ச்சனாகாரக மேளம். இதன் மத்திம, பஞ்சம, நிஷாத சுரங்கள் கிரக பேதத்தின் வழியக முறையே கௌரிமனோகரி (23), நாடகப்பிரியா (10), வாசஸ்பதி (64) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.
- இதன் எண்ணைத் திருப்பிப் போட்டால் (62), இதன் பிரதி மத்திம மேளமாகிய ரிஷப்பிரியா கிடைக்கும்.
- கிருதி : ஆடமோடிகல : ஆதி : தியாகராஜர்.
- கிருதி : நீதானப்பா : ஆதி : கோடீஸ்வர ஐயர்.
- கிருதி : வழி காட்டும் : ஆதி : பெரியசாமி தூரன்.
- கிருதி : ஆடிய வேடிக்கை : மிஸ்ர ஜம்பை : முத்துத் தாண்டவர்.
- கிருதி : சக்தி எனக்குள் : ஆதி : இலட்சுமணபிள்ளை.
- இன்னும் என் மனம்... - லால்குடி ஜெயராமன்
ஜன்ய இராகங்கள்
[தொகு]சாருகேசியின் ஜன்ய இராகங்கள் இவை.
திரையிசைப் பாடல்கள்
[தொகு]சாருகேசி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:
- வசந்த முல்லை போலே :சாரங்கதாரா
- ஆடல் கலையே தெய்வம் தந்தது : ஸ்ரீ ராகவேந்திரா
- சம்சாரம் அது மின்சாரம் : சம்சாரம் அது மின்சாரம்
- தூது செல்வதாரடி : சிங்கார வேலன்
- உதயா உதயா : உதயா
- தாலாட்டும் காற்றே : பூவெல்லாம் உன் வாசம்
- ஏதோ ஏதோ ஒன்று : எனக்கு 20 உனக்கு 18
- மன்மத லீலையை வென்றாருண்டோ..: ஹரிதாஸ்
- ஆடல் காணீரோ..: மதுரை வீரன்
- மண மாலயும் மஞ்சளும் சூடி, வாத்தியார் வீட்டுப் பிள்ளை
- மயங்கினேன் சொல்லத் தயங்கினேன், நானே ராஜா நானே மந்திரி
- நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ, எங்கேயும் காதல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
- ↑ Devotional song on Charukesi by P. Unni Krishnan