உள்ளடக்கத்துக்குச் செல்

பூபாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூபாளம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 8வது மேளகர்த்தா இராகமாகும். நேத்ர என்றழைக்கப்படும் 2வது சக்கரத்தின் 2வது மேளமாகிய தோடியின் ஜன்னிய இராகம் ஆகும். விடியற்காலையில் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ- ஔடவ இராகம் ஆகும். மிகப் பழமையான, மங்களகரமான இராகம்.

இலக்கணம்

[தொகு]
பூபாளம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி11 ப த1 ஸ்
அவரோகணம்: ஸ் த1 ப க1 ரி1
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதர அம்சங்கள்

[தொகு]
  • பண்டைத்தமிழ் இசையில் இந்த இராகத்திற்கு புற நீர்மைப் பண் என்று பெயர்.[1]
  • ஜண்டை சுரக்கோர்வைகளும், தாட்டு சுரக்கோர்வைகளும் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றன.
  • பேராசிரியர் சாம்பமூர்த்தி அவர்கள் இந்த இராகத்தில் அந்தர காந்தாரம் தான் சற்று அசைவுடன் பேசுகிறது, பூர்வக் கிரந்தங்களில் இது தோடி மேளத்தின் ஜன்யமாக கூறப்பட்டிருந்தாலும் உண்மையில் மாயாமாளவகௌளை மேளத்தின் பிறப்பாகக் (ஜன்யமாகக்) கொள்வதே சிறந்தது என்று கூறுகின்றார்.

உருப்படிகள்[2]

[தொகு]
  1. தேவாரம் : "மங்கையற்கரசி" - ஆதி - திருஞானசம்பந்தர்.
  2. கிருதி : "அன்னை ஜானகி" - ஆதி - அருணாசலக் கவிராயர்.
  3. கிருதி : "தினமிதே நற்றினமே" - ஆதி - பாபநாசம் சிவன்.
  4. கிருதி : "சக்தி தனக்கே" - ஏகம் - சுப்பிரமணிய பாரதியார்.
  5. கிருதி : "திருப்பள்ளி எழுந்தருள்" - ஆதி - கவிகுஞ்சர பாரதியார்.
  6. கீர்த்தனை: "தீன ஜனவான" - ஆதி – தியாகராஜர்
  7. கிருதி: "சதாசலேச்வர" - திச்ர ஏகம் – முத்துசுவாமி தீட்சிதர்
  8. அஷ்டபதி: "மாமியஞ்சலி" - சாபு- ஜெயதேவர்

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. அ. கி. மூர்த்தி (1998). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 161.
  2. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூபாளம்&oldid=2971898" இலிருந்து மீள்விக்கப்பட்டது