கௌரி (இராகம்)
கௌரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய மாயாமாளவகௌளையின் (அக்னி/3வது சக்கரம் 3வது மேளம்) ஜன்னிய இராகம் ஆகும்.
வரலாறு
[தொகு]கௌரி இராகம் ஜகதேகமல்லர் இயற்றிய சங்கீத சூடாமணியிலும், ஸ்ரீனிவாஸரின் ராக தத்வ விபோதத்திலும், பாவபட்டரின் (Bhavabhatta) அனுப சங்கீத விலாசத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ப்ரஹதர்ம புராணம் கௌரியை காந்தாரத்தின் ராகிணியாக (மனைவி ராகம்) குறிப்பிடுகிறது.[1]
விளக்கம்
[தொகு]ஆரோகணம் | ஸ ரி ம ப நி ஸ் |
அவரோகணம் | ஸ் நி ப த ம க ரி ஸ |
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
கௌரி ஒரு ஔடவ-சம்பூர்ண ராகம். உபாங்க ராகம். திரிஸ்தாயி ராகம். கான ரஸ ராகம். இதில் வரும் ரி ஏகஸ்ருதி ரிஷபத்திற்கு அருகிலுள்ளது. நி கம்பித கமகத்துடன் பிடிக்கப்படுகிறது. ம மற்றும் நி ராகத்தின் சாயையை அளிக்கும் ஸவரங்கள். க நியாஸ ஸவரம். ப அம்ஸ ஸ்வரம். விரிவான ஆலாபனைக்கு இடமளிக்காது. ரிரிபமபா என்பது ரக்திப்பிரயோகம். பதபஸ் விசேஷ சஞ்சாரம். இந்த ராகத்தில் உருப்படிகள் (பாடல்கள்) ரி-யில் தொடங்குகின்றன. [1]
உருப்படிகள்
[தொகு]- கீர்த்தனை: ஜெயஜெயசிறீரகு
- கிருதி: துர்ஜடி நடிஞ்செனெ, ஆதி தாளம், பல்லவி துரைசாமி அய்யர்[1]
- கிருதி: கௌரி கிரிராஜ குமாரி, திஸ்ர ஏக தாளம், முத்துஸ்வாமி தீக்ஷிதர்[1]