ஏமாங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏமாங்கி அல்லது ஹேமாங்கி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 54வது மேளகர்த்தா இராகமும், "பிரம்ம" என்று அழைக்கப்படும் 9வது சக்கரத்தின் 6வது இராகமுமாகிய விஷ்வம்பரியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

ஹேமாங்கி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), ஷட்சுருதி தைவதம் (த3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ஸ ரி1323 ஸ்
அவரோகணம்: ஸ் த323 ரி1

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏமாங்கி&oldid=2401788" இலிருந்து மீள்விக்கப்பட்டது