சிவக்காம்போதி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவக்காம்போதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
[தொகு]இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), கைசிக நிசாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு.
ஆரோகணம்: | ச ரி2 க3 ம1 நி2 ச் |
அவரோகணம்: | ச் நி2 ப ம1 க3 ரி2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது ஔடவ-சாடவ இராகம் எனப்படுகின்றது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
| |||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவக்காம்போதி&oldid=1074918" இலிருந்து மீள்விக்கப்பட்டது