ஜகன்மோகினி
Appearance
ஜகன்மோகினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். இது ஔடவ-ஷாடவ இராகம் ஆகும். இது உபாங்க இராகம் ஆகும்.
இலக்கணம்
[தொகு]ஆரோகணம்: | ஸ க3 ம1 ப நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 ப ம1 க3 ரி1 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- ஆரோகணத்தில் ரி, த வர்ஜம். அவரோகணத்தில் த மட்டும் வர்ஜம்.
வகை | உருப்படி | தாளம் | கலைஞர் |
---|---|---|---|
கிருதி | "சோபில்லு சப்தசுவர" | ரூபகம் | தியாகராஜர் |
கிருதி | "மாமவ சததம்" | ஆதி | தியாகராஜர் |
கிருதி | "சிவகாமசுந்தரி" | ரூபகம் | கோபாலகிருஷ்ண பாரதியார் |
கிருதி | "எங்கும் நிறைந்த" | கண்டசாபு | எம். எம். தண்டபாணி தேசிகர் |
கிருதி | "ஸ்ரீ சுபதேவ" | ரூபகம் | முத்தையா பாகவதர் |
கிருதி | "காணமல் இருந்தால்" | ஆதி | முத்துத் தாண்டவர் |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
உசாத்துணைகள்
[தொகு]- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
- டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996