உள்ளடக்கத்துக்குச் செல்

மத்தியமாவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மத்தியமாவதி (Madhyamavati) இராகம் 22வது மேளகர்த்தா இராகமாகிய "வேத" என்றழைக்கப் படும் 4வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய கரகரப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும். தேவாரப் பண்களில், செந்துருத்தி என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.[1] இது பாடவேண்டிய காலம் நண்பகல் ஆயினும், மிகவும் சுபகரமான இராகமானதால் இதை எப்போதும் பாடலாம்.

இலக்கணம்[தொகு]

மத்தியமாவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி21 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி2 ப ம1 ரி2
 • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், கைசிகி நிஷாதம்(நி2), ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதர அம்சங்கள்[தொகு]

 • இது கமக வரிக ரத்தி இராகம் ஆகும்.
 • இது திரிஸ்தாயி இராகம் என்பதுடன் இது புராதன இராகம் ஆகும்.
 • சுத்த கர்னாடக இராகம் ஆகும்.
 • இதன் தாட்டுப் பிரயோகங்கள் மிகவும் ரஞ்சகமானவை. இவ்விராகம் இசை நாடகங்களில் உபயோகப் படுத்தப்படும் இராகங்களில் ஒன்று.
 • சர்வ ஸ்வர மூர்ச்சனாகார ஜன்ய ராகம். இவ்விராகம் மோகனத்தின் ரிஷப மூர்ச்சனையே ஆகும்.
 • இந்த இராகத்தை கச்சேரி, பஜனை, காலஷேபம், நாடகம் முதலிய நிகழ்ச்சிகளின் இறுதியில் பாடி முடிக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகின்றது. பல்வேறு இராகங்களைக் கேட்பதன் மூலமாக பல்வேறு இரச உணர்ச்சிகள் நமக்கு ஏற்படுகின்றன.

உருப்படிகள்[தொகு]

 • கிருதி : ராமகதா சுதா, தியாகராஜர், ஆதி தாளம்
 • கிருதி : அல்ல கலல்ல, தியாகராஜர், ரூபகம் தாளம்
 • கிருதி : நாதுபை, தியாகராஜர், கண்ட சாபு தாளம்
 • கிருதி : அடிகி சுகமு, தியாகராஜர், மிஸ்ர சாபு தாளம்
 • கிருதி : முச்செட பிரம்மா, தியாகராஜர், ஆதி தாளம்
 • கிருதி : ராமாபிராம, மைசூர் வாசுதேவச்சாரியார், ஆதி தாளம்
 • கிருதி : பாலிம்சு காமாட்சி, சியாமா சாஸ்திரிகள், ஆதி தாளம்
 • கிருதி : சரவனபவ குஹனே, பாபநாசம் சிவன், ஆதி தாளம்
 • கிருதி : கற்பகமே கண் பாராய், பாபநாசம் சிவன், ஆதி தாளம்
 • கிருதி : கண்ணா காத்தருள், பாபநாசம் சிவன், ஆதி தாளம்

மத்தியமாவதி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்[தொகு]

 • துள்ளித்துள்ளி நீ பாடம்மா - சிப்பிக்குள் முத்து
 • சேலை கட்டும் பெண்ணுக்கொரு :- கொடி பறக்குது

மேற்கோள்கள்[தொகு]

 1. அ. கி. மூர்த்தி (1998). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 161.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தியமாவதி&oldid=3307109" இலிருந்து மீள்விக்கப்பட்டது