பூரணசந்திரிகா
Appearance
பூரணசந்திரிகா இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
[தொகு]இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:
ஆரோகணம்: | ச ரி2 க3 ம1 ப த2ப ச் |
அவரோகணம்: | ச் நி3 ப ம1 ரி2 க3 ம1 ரி2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர். இதில் ஆரோகணத்தில் பஞ்சமமும், அவரோகணத்தில் ரிசபம், மத்திமம் என்பனவும் ஒழுங்குமாறி வருகின்றன. இதனால் இவ்விராகம் ஒரு வக்கிர இராகம் ஆகும்.
இசை வடிவங்கள்
[தொகு]- தில்லானா: தோம்தோம் தனை - ஆதி - இராமநாதபுரம் ஸ்ரீநிவாச ஐயங்கார்.[2]
- கிருதி : தெலிசிராம - ஆதி - தியாகராஜர்.
- கிருதி : சங்க சக்கீர - ரூபகம் - முத்துசுவாமி தீட்சிதர்.
- கிருதி : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி - ஆதி - முத்துசுவாமி தீட்சிதர்.
- கிருதி : பாதமே துணை - ஆதி - கோபால கிருஷ்ண பாரதியார்.
- கிருதி : இன்னம்தான் பாராமுகமோ - ஆதி - வேதநாயகம் பிள்ளை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Music Handbook - Raga Index -P 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ டாக்டர் கே. ஏ. பக்கிரிசாமிபாரதி (செப்டெம்பர் 2006). இந்திய இசைக்கருவூலம். சென்னை: குசேலர் பதிப்பகம். p. 210-211.