பௌளி
Appearance
பௌளி பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
[தொகு]இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த1), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச ரி1 க3 ப த1 ச் |
அவரோகணம்: | ச் நி3 த1 ப க3 ரி1 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சாடவ" இராகம் என்பர்.
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கீர்த்தனை | மேலுகோவைய்யா | தியாகராஜ சுவாமிகள் | ஜம்பை |
கிருதி | கருணாநிதியே | பாபநாசம் சிவன் | திரிபுடை |
கிருதி | ஸ்ரீ பார்வதி | முத்துசுவாமி தீட்சிதர் | ஆதி |
கிருதி | சம்போ மகாதேவா | நீலகண்ட சிவன் | ஆதி |
கிருதி | தூய நெஞ்சமுள்ள | இலட்சுமணப்பிள்ளை | ஆதி |
கிருதி | நீ தயவாய் | முத்துத்தாண்டவர் | ஆதி |
கிருதி | என் முறை கேட்டு | பெரியசாமித் தூரன் | ஆதி |
கிருதி | பார்வதி நாயகா | சுவாதித் திருநாள் ராம வர்மா | ஆதி |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.