நாதநாமக்கிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாதநாமக்கிரியை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாதநாமக்கிரியை இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய மாயாமாளவகௌளையில் பிறக்கும் ஜன்னிய இராகம் ஆகும். கருணைச்சுவையை வெளிப்படுத்தும் இவ்விராகம் ஒரு துணை இராகம் (உபாங்க இராகம்) ஆகும். மாலையில் பாட உகந்த இந்த இராகமானது இசை நாடகங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும்.

ஆரோகணம்: ஸ ரி131 ப த1 நி3
அவரோகணம்: நி31 ப ம13 ரி1 ஸ நி3
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதர அம்சங்கள்[தொகு]

  • இது நிஷாதம் எல்லையாகக் கொண்ட ஒரு இராகம் அதாவது மந்தர ஸ்தாயி சுரங்கள் மட்டுமே வந்து மேல் ஸ்தாயி ஷட்ஜம் தொடாத இராகம்; இதனை நிஷாதாந்திய இராகம் என்றும் கூறுவர்.
  • பண்டைத் தமிழிசையில் இவ்விராகத்திற்கு பெயர் பண் சீகாமரம். இந்தளம் என்றும் அழைக்கப்படுகிறது.[1]
  • மாயாமாளவகௌளை தோன்றுவதற்கு முன்பே இவ்விராகம் வழக்கத்தில் இருந்தது.
  • சௌக கால பிரயோகங்கள் இவ்விராகத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
  • பிரத்தியாகத கமகம் இந்த இராகத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும்.
  • கிராமிய இசையிலிருந்து மரபு இசைக்கு வந்த இராகங்களில் இதுவும் ஒன்று. ஆனந்தக் களிப்பு என்ற வர்ண மெட்டு இவ்விராகத்தில் அமைந்ததாகும்.

உருப்படிகள்[2][தொகு]

  1. திவ்வியநாமக்கீர்த்தனை : "கருணாஜலதே" - ஆதி - தியாகராஜ சுவாமிகள்.
  2. திருப்புகழ் : "ஒருபதம் இருபதம்" - ஆதி - அருணகிரி நாதர்
  3. 23ஆம் அஷ்டபதி : "கிஸலய சயன" - ஆதி - ஜெயதேவர்
  4. பதம்: "பய்எத" - திரிபுடை - சேத்ரக்ஞர்
  5. கிருதி : "அனுமானே நீயே" - மிஸ்ரசாபு - அருணாசலக் கவிராயர்
  6. கிருதி : "சிவலோக நாதனை" - ரூபகம் - கோபாலகிருஷ்ண பாரதியார்.
  7. கிருதி : "நீலகண்டாய" - மிஸ்ரசாபு - முத்துசுவாமி தீட்சிதர்.
  8. கிருதி : "நினைப்பதெப்போது" - ஆதி - மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
  9. கிருதி : "நீயே துணையாகவே" - ஆதி - கவிகுஞ்சர பாரதியார்.
  10. கிருதி : "நினைப்பதெப்போது" - ஆதி - வேதநாயகம் பிள்ளை.
  11. கிருதி : "இந்தபராக" - ரூபகம் - ஆனை-ஐயா.

மேற்கோள்கள்[தொகு]

  1. அ. கி. மூர்த்தி (1998) (in தமிழ்). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். பக். 161. https://ta.wikisource.org/s/4u7c. 
  2. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாதநாமக்கிரியா&oldid=2971933" இலிருந்து மீள்விக்கப்பட்டது