ஜெயமனோகரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெயமனோகரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், "வேத" என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

ஜெயமனோகரி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஜெயமனோகரி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2)சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), சதுச்ருதி தைவதம் (த2), கைசிக நிசாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி2212 ச்
அவரோகணம்: ச் நி2212 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படுகிறது. இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ-சாடவ" இராகம் எனப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயமனோகரி&oldid=1017397" இலிருந்து மீள்விக்கப்பட்டது