நீலாம்பரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீலாம்பரி இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். பண்டைய தமிழிசைப் பண்களில் மேகராகக் குறிஞ்சி என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.[1]

இலக்கணம்[தொகு]

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), காகலி நிசாதம் (நி3), சட்சம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி231 ப நி3 ப ச்
அவரோகணம்: ச் நி3 ப ம13 ரி23

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர். இதன் ஆரோகணத்தில் பஞ்சமமும், அவரோகணத்தில் காந்தாரமும் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.

உருப்படிகள்[2][தொகு]

கிருதி தாளம் கலைஞர்
தாயே நீயே அட கூரைநாடு நடேசப்பிள்ளை
மாதர் மட ரூபகம் திருஞான சம்பந்தர்
தரையின் மானுடர் திரிபுடை அருணகிரிநாதர்
நீகேதயராக மிச்ரசாபு தியாகராஜர்
அம்பாநீலயதாக்சி ஆதி முத்துசுவாமி தீட்சிதர்
காணக் கண்ணாயிரம் ஆதி ஆனை ஐயா
வாருங்கள் வாருங்கள் ஜம்பை கோபால கிருஷ்ண பாரதியார்
கனவிலும் மறப்பதில்லை ஜம்பை முத்துத் தாண்டவர்
அம்பா நீலாம்பரி ஆதி பொன்னையா பிள்ளை
நீலாம்பரி ஜெகதீஸ்வரி ஆதி பொன்னையா பிள்ளை

மேற்கோள்கள்[தொகு]

  1. அ. கி. மூர்த்தி (1998) (in தமிழ்). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். பக். 161. https://ta.wikisource.org/s/4u7c. 
  2. பக்கம் எண்:208, டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலாம்பரி&oldid=2971915" இலிருந்து மீள்விக்கப்பட்டது