சண்முகப்பிரியா
Appearance
சண்முகப்பிரியா கருநாடக இசையின் 56வது மேளகர்த்தா இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்த இராகத்தின் தோற்றமான (ஜன்யமான) சாமரம் அசம்பூர்ண மேள பத்ததியில் 56 வது இராகமாக விளங்குகிறது.
இலக்கணம்
[தொகு]ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம2 ப த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம2 க2 ரி2 ஸ |
- திசி என்றழைக்கப்படும் 10வது சக்கரத்தில் 2வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- முக்கிய பிரதி மத்திம இராகங்களில் இதுவும் ஒன்று.
சிறப்பு அம்சங்கள்
[தொகு]- பக்திச் சுவையை வெளிப்படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
- 20வது மேளமாகிய நடபைரவியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
- பிரத்தியாகத கமகம் இந்த இராகத்தின் சாயலை நன்கு வெளிப்படுத்தும்.
- மூர்ச்சனாகாரக மேளம். இதன் க, ப, த கிரக பேதத்தின் வழியாக முறையே சூலினி (35), தேனுகா (09), சித்ராம்பரி (66) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
உருப்படிகள்
[தொகு]- கிருதி : வத்தனே வாரு : ஆதி : தியாகராஜ சுவாமிகள்.
- கிருதி : சித்தி விநாயகம் : ரூபகம் : முத்துசாமி தீட்சிதர்.
- கிருதி : அரகர சிவ : ஆதி : முத்துத் தாண்டவர்.
- கிருதி : சுகமே சுகம் : ஆதி : கோடீஸ்வர ஐயர்.
- கிருதி : பார்வதி நாயகனே : ஆதி : பாபநாசம் சிவன்.
ஜன்ய இராகங்கள்
[தொகு]சண்முகப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.
- பிரிமரசாரங்க
- நாகபிரபாவளி
- கமலநாராயணி
- திருமூர்த்தி
- வசீரி
- ஹம்சகீர்வாணி
- கோபிகாதிலகம்
- சுமநீசரஞ்சனி
- வசுகெற்ப
- பாவுகதாயினி
திரையிசைப் பாடல்கள்
[தொகு]சண்முகப்பிரியா இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:
- பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா - திருவிளையாடல்[1]
- மறைந்திருந்து பார்க்கும் - தில்லானா மோகனாம்பாள்
- சொல்லாயோ வாய் திறந்து - மோகமுள்
- கண்ணுக்குள் நூறு நிலவா - வேதம் புதிது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Charulatha Mani. "A Raga's Journey - Sacred Shanmukhapriya". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 27 பிப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)