மாதவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர். மாதவன்
Madhavanprof.JPG
இயற் பெயர் மாதவன் ரங்கநாதன்
பிறப்பு சூன் 1, 1970 (1970-06-01) (அகவை 50)
ஜாம்ஷெட்பூர், ஜார்க்கண்ட்  இந்தியா
வேறு பெயர் மேடி
துணைவர் சரிதா
குறிப்பிடத்தக்க படங்கள் அலைபாயுதே
கன்னத்தில் முத்தமிட்டால்
ஆய்த எழுத்து
மின்னலே

ஆர். மாதவன் (பிறப்பு: ஜூன் 1, 1970, ஜாம்ஷெட்பூர்), இந்தியத் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார்.[1] திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். இவர் ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம்ஃபேர் விருது வாங்கியுள்ளார்.[2] சின்னச் சின்ன வேடங்களில் நடித்த வந்த இவர் மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படம் மூலம் பிரபலம் ஆனார். பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். அமீர் கானுடன் இந்தியில் இவர் நடித்த 3 இடியட்ஸ் படம் வெற்றி பெற்றது.[3] மாதவன் நடித்த சில தமிழ்த் திரைப்படங்கள்:

நடித்த திரைப்படங்கள்[தொகு]

வருடம் திரைப்படம் பாத்திரத்தின் பெயர் மொழி மேலும் தகவல்கள்
1996 இஸ் ராத் கி சுபாக் நகின் கிளப் பாடகர் இந்தி புகழ்பெறாப் பாத்திரம்
1997 இண்பெர்னோ ரவி ஆங்கிலம்
1999 சாந்தி சாந்தி சாந்தி சித்தார்த் கன்னடம்
2000 அலைபாயுதே கார்த்திக் தமிழ்
என்னவளே ஜேம்சு வசந்த் தமிழ்
2001 மின்னலே ராஜேஷ் சிவகுமார் தமிழ்
டும் டும் டும் ஆதித்யா தமிழ்
பார்த்தாலே பரவசம் மாதவா தமிழ்
ரகுனா கை தில் மெய்ன் மாதவ் சாஸ்திரி இந்தி பரிந்துரை, சிறந்த அறிமுக நடிகருக்கான ஜீ சினி விருது
பரிந்துரை, மிகச் சீரிய புதுமுக ஆண் நட்சத்திரத் திரை விருது
2002 கன்னத்தில் முத்தமிட்டால் திருசெல்வன் தமிழ் வெற்றியாளர், சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது மேலும் ரன், அன்பே சிவம்
ரன் சிவா தமிழ் வெற்றியாளர், சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது மேலும் கன்னத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம்
தில் வில் பியார் வியார் கிரிஷ் இந்தி
2003 அன்பே சிவம் அன்பரசு தமிழ் வெற்றியாளர், வெற்றியாளர் , ஜடிஎஃப்ஏ சிறந்த துணைநடிகர் விருது
வெற்றியாளர், சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது மேலும் கன்னத்தில் முத்தமிட்டால், ரன்
பரிந்துரை, தமிழின் சிறந்த துணைநடிகருக்கான பிலிம்பேர் விருது
நள தமயந்தி ராம்ஜி தமிழ்
லேசா லேசா தேவ நாராயணன் தமிழ் கெளரவ தோற்றம்
ப்ரியமான தோழி அசேக் தமிழ்
ஜேஜே ஜெகன் தமிழ்
2004 நத்திங் பட் லைப் தாமஸ் ராபர்ட்சு மலையாளம்
எதிரி சுப்பிரமணி தமிழ்
ஆய்த எழுத்து இன்பா சேகர் தமிழ் வெற்றியாளர், தமிழின் சிறந்த துணைநடிகருக்கான பிலிம்பேர் விருது
2005 பிரியசகி சந்தான கிருஷ்ணன் தமிழ்
ராம்ஜி லண்டன்வாலே ராம்ஜி திவாரி இந்தி மேலும் எழுத்தாளர்
2006 ரங் தே பசந்தி அஜய் ரதோட் ஹிந்தி சிறப்புத் தோற்றம்
தம்பி வேலு தொண்டைமான் தமிழ்
ரெண்டு சக்தி,
கண்ணன்
தமிழ்
2007 குரு சியாம் சக்சேனா இந்தி
தில்லி ஹைட்ஸ் அவராக ஹிந்தி அவராக தோன்றல்
ஆர்யா ஆர்யா தமிழ்
தட் போர்-லட்டர் வேர்டு அவராக ஆங்கிலம் அவராக தோன்றல்
எவனோ ஒருவன் சிறீதர் வாசுதேவன் தமிழ் வெற்றியாளர், ஐடிஎஃப்ஏ சிறந்த நடிகர் விருது
மேலும் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர்
2008 வாழ்த்துகள் கதிரவன் தமிழ்
மும்பை மேரி ஜான் நிகில் அகர்வால் இந்தி
திப்பு கன்யன் திப்பு கிரி அவராக மலையாளம் அவராக தோன்றல்
2009 யாவரும் நலம் மனோகர் தமிழ் ஒரே நேரத்தில் 13பீஎன்று இந்தி தயாரிக்கப்பட்டது
பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் விருது
13பி மனோகர் இந்தி அதேவேளையில் தமிழில், யாவரும் நலம்
குரு என் ஆளு குரு தமிழ்
சிக்கந்தர் ராஜேஸ் ராவ் இந்தி
3 இடியட்சு ஃபர்ஹான் குரேஷி இந்தி பரிந்துரை, சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது
பரிந்துரை, ஐஐஎஃப்ஏ சிறந்த துணை நடிகர் விருது
2010 ஓம் சாந்தி மேடி தெலுங்கு கெளரவ தோற்றம்
டீன் பாட்டி சந்தானு இந்தி
ஜூடா ஹி ஜாகி இந்தி (கெளரவ தோற்றம்)
மன்மதன் அம்பு தமிழ்
சண் கிளாஸ்(திரைப்படம்) இந்தி
2011 தனு வெட்ஸ் மனு மனு இந்தி பிந்தைய தயாரிப்பு
நான் அவள் அது ஆதித்யா தமிழ் தாமத வருகை

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவன்&oldid=2923053" இருந்து மீள்விக்கப்பட்டது