பிரியசகி
பிரியசகி | |
---|---|
இயக்கம் | கே. எஸ். அதியமான் |
தயாரிப்பு | தேனப்பன். பி. எல், எஸ். எம். வெங்கட் |
கதை | Rumi Jaffery |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | மாதவன் சதா ரமேஷ் கன்னா மனோபாலா |
வெளியீடு | ஏப்ரல் 14, 2005 |
ஓட்டம் | 158 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பிரியசகி (Priyasakhi) 2005 ஆம் ஆண்டு வெள்வந்த தமிழ் மொழித் திரைப்படமாகும். கே. எஸ். அதியமான் இதன் இயக்குனர் ஆவார். இப்படத்தில் மாதவன், சதா , ஐஸ்வர்யா, பிரதாப்போத்தன், மனோபாலா ,சீதா,ரேகா ஆகியோர் நடித்துள்ளனர். பரத்வாஜ் இப்படத்தின் இசையமைப்பாளர் ஆவார்.
கதைச்சுருக்கம்
[தொகு]தமிழ்நாட்டில் அம்மா,அண்ணன்-அண்ணி,குழந்தைகளோடு வசிக்கும் சந்தான கிருஷ்ணன் (சகி-மாதவன்) துபாய் செல்கிறான். அங்கே மாடல் அழகி பிரியா(சதா)வை சந்தித்து காதல் கொள்கிறான். பிரியாவின் டயரியைக் கொண்டு அவளுக்குப் பிடித்தவை அனைத்தும் தனக்கும் பிடித்ததாக நாடகமாடி பிரியாவை காதலிக்க,உண்மையறியாத பிரியாவும் அவனைக் காதலிக்கிறாள். திருமணம் நடக்கிறது. பிரியாவின் அம்மாவுக்கு சகியைப் பிடிக்காமல் போகிறது. திருமணத்திற்குப் பிறகு பிரியா தனிக்குடித்தனம் போக விரும்ப, சகி மறுக்கிறான். கர்ப்பிணியான பிரியா சகியிடமிருந்து விவாகரத்து பெற நீதிமன்றம் செல்கிறாள் தன் தாயின் தூண்டுதலின் பேரில். நீதிபதி ரேகா தீர்ப்பு அளிக்கிறார். அதன்படி,சகி கர்ப்பிணி மனைவியின் வீட்டில் தங்கி குழந்தைப் பிறப்பு வரை பாதுகாக்கிறான். குழந்தை பிறக்கிறது. தீர்ப்பின்படி குழந்தை சகியோடுதான் இருக்க வேண்டும். குழந்தைப் பாசம் பிரியாவின் மனமாற்றத்திற்கு வழிவகுக்கிறது. முடிவு கிடைக்கிறது. கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை வலியுறுத்தும் படமாக அமைகிறது [1]
கதைமாந்தர்கள்
[தொகு]- மாதவன் - சகி என்கிற சந்தான கிருஷ்ணன்
- சதா - பிரியா
- ரமேஷ் கண்ணா - சகியின் அண்ணன்
- ரஞ்சனி - அண்ணி
- இராஜலட்சுமி-அம்மா
- நீலிமாராணி-தங்கை
- சச்சு-பாட்டி
- அர்ஜுன்,அஞ்சலி- அண்ணணின் குழந்தைகள்
- ஐஸ்வர்யா-பிரியாவின் அம்மா
- பிரதாப் போத்தன் -அப்பா
- மனோபாலா -ஐஸ்வர்யாவின் நண்பர்
- கோவை சரளா - ஏட்டு P.C.K.C.
- மருத்துவர் - சீதா
- நீதிபதி - ரேகா
- ருச்சி - நர்ஸ் மினி
- தும்கின் - பிரியாவின் துபாய் தோழி
- வையாபுரி - விளம்பர நடிகர்
மற்றும் பலர் [1]