உள்ளடக்கத்துக்குச் செல்

கோவை சரளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவை சரளா
பிறப்புஏப்ரல் 7, 1962 (1962-04-07) (அகவை 63)
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்
சமயம்இந்து

கோவை சரளா (பிறப்பு: ஏப்ரல் 7, 1962) முக்கியத் துணை வேடங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை, மற்றும் நகைச்சுவை நடிகை ஆவார். தனது 25 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில், 750 படங்களில் நடித்துள்ளார்.[1] இவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது[2], சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான நந்தி விருது[3] ஆகியவற்றை முறையே பூவெல்லாம் உன் வாசம் (2001) மற்றும் ஒரி நீ பிரேம பங்கரம் கனு (2003) ஆகிய படங்களில் தனது நடிப்புக்காக வென்றுள்ளார். இவரது பெற்றோர் கேரளா மாநிலம் திரிச்சூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
  1. முந்தானை முடிச்சு (1983)
  2. வைதேகி காத்திருந்தாள் (1984)
  3. தம்பிக்கு எந்த ஊரு (1984)
  4. மண்ணுக்கேத்தப் பொண்ணு (1984)
  5. உயர்ந்த உள்ளம் (1985)
  6. சின்ன வீடு (1985)
  7. லட்சுமி வந்தாச்சு (1985)
  8. நான் சிகப்பு மனிதன் (1985)
  9. ஜப்பானில் கல்யாண ராமன் (1985)
  10. வசந்த ராகம் (1986)
  11. பேர் சொல்லும் பிள்ளை (1987)
  12. சூரசம்ஹாரம் (திரைப்படம்) (1988)
  13. ராஜா சின்ன ரோஜா (1989)
  14. தங்கமான புருசன்(1989)
  15. கரகாட்டக்காரன் (1989)
  16. தங்கமணி ரங்கமணி (1989)
  17. பாண்டி நாட்டுத் தங்கம் (1989)
  18. அதிசய மனிதன் (1990)
  19. என் காதல் கண்மணி (1990)
  20. மை டியர் மார்த்தாண்டன் (1990)
  21. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும் (1991)
  22. சின்னவர் (1992)
  23. வரவு எட்டணா செலவு பத்தணா (1992)
  24. திருமதி பழனிச்சாமி (1992)
  25. காட்பாதர் (1992)
  26. சேதுபதி ஜ.பி.எஸ் (1994)
  27. பவித்ரா (1994)
  28. நம்மவர் (1994)
  29. பவித்ரா (1994)
  30. பைரவ தீபம் (1994) (தெலுங்கு)
  31. சதி லீலாவதி (1995)
  32. பெல்லி (1996) (தெலுங்கு)
  33. காலம் மாறிப்போச்சு (1996)
  34. காதலா காதலா (1998)
  35. அவள் வருவாளா (1998)
  36. உதவிக்கு வரலாமா (1998)
  37. கனவே கலையாதே (1999)
  38. ஆனந்த பூங்காற்றே (1999)
  39. கண்ணோடு காண்பதெல்லாம் (1999)
  40. பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
  41. நிறம் (1999) (மலையாளம்)
  42. பாட்டாளி (1999)
  43. திருப்பதி ஏழுமலை வெங்கடேசா (1999)
  44. விரலுக்கேத்த வீக்கம் (1999)
  45. மகளிருக்காக (2000)
  46. பட்ஜெட் பத்மநாபன் (2000)
  47. உயிரிலே கலந்தது (2000)
  48. கந்தா கடம்பா கதிர்வேலா (2000)
  49. டபுள்ஸ் (2000)
  50. மாயி (2000)
  51. கந்தா கடம்பா கதிர்வேலா (2000)
  52. நூவே காவாலி (2000) (தெலுங்கு)
  53. ஷாஜகான் (2001)
  54. மரிகராஜூ (2001) (தெலுங்கு)
  55. மிட்டா மிராசு (2001)
  56. பூவெல்லாம் உன் வாசம் (2001)
  57. பிரியாத வரம் வேண்டும் (2001)
  58. என் மன வானில் (2001)
  59. ஹனுமான் ஜங்சன் (2001)
  60. விஸ்வநாதன் ராமமூர்த்தி (2001)
  61. வீட்டோட மாப்பிள்ளை (2001)
  62. என்னம்மா கண்ணு (2002)
  63. தென்காசிப்பட்டிணம் (2002)
  64. ஓரி நீ பிரமா பங்காரம் கண்ணு (2003) (தெலுங்கு)
  65. நேசம் பேசுது (2003)
  66. எலா செப்பேனு (2003) (தெலுங்கு)
  67. வானம் வசப்படும் (2004)
  68. விஷ்வதுளசி (2004)
  69. நாயுடு எல்எல்பி (2005) (தெலுங்கு)
  70. சக்கலக்கா பேபி (2005)
  71. பிரியசகி (2005)
  72. மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
  73. எவடி கோல வாடிடி (2005) (தெலுங்கு)
  74. கோவை பிரதர்ஸ் (2006)
  75. ஸ்டைல் (2006) (தெலுங்கு)
  76. வீரபத்திரர் (2006) (தெலுங்கு)
  77. ராம் (2006) (தெலுங்கு)
  78. தேசமுடு (2007) (தெலுங்கு)
  79. உயிரின் ஓசை (2007)
  80. முனி (2007)
  81. உளியின் ஓசை (2008)
  82. ஹீரோ (2008) (தெலுங்கு)
  83. வில்லு (2009)
  84. முனி 2:காஞ்சனா (2011)
  85. ஒரு நடிகையின் வாக்குமூலம் (2012)
  86. பாகன் (2012)
  87. மேட் டேட் (2012) (மலையாளம்)
  88. கண்ணா லட்டு தின்ன ஆசையா (திரைப்படம்) (2013)
  89. மசாலா(2013)
  90. தில்லு முல்லு (2013)
  91. ஆர்யா சூர்யா (2013)
  92. ரகளபுரம் (2013)
  93. சித்திரையில் நிலாச்சோறு (2013)
  94. மாலினி 22 பாளையங்கோட்டை (2014) - Sarala
  95. மாலினி 22 விஜயவாடா (2014) - Sarala
  96. வானவராயன் வல்லவராயன் (2013) - படபிடிப்பில்
  97. முனி 3: கங்கா (2013) - படபிடிப்பில்
  98. ரெட்டை வாலு (2013) - படபிடிப்பில்
  99. அரண்மனை (திரைப்படம்) (2014) - படபிடிப்பில்
  100. காசி' (2015) - படபிடிப்பில்

தொலைக்காட்சி

[தொகு]

தனிப்பட்ட வாழ்க்கை

கோவை சரளா திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர், தனது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளை வளர்த்து வருகிறார்.

பிரபலமான அவரின் சில வசனங்கள்

  • ’என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம்’ – கரகாட்டக்காரன்
  • ‘என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாகோ, தஞ்சாவூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்’ – கரகாட்டக்காரன்
  • ’சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’ – ஷாஜஹான்
  • ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ – ஷாஜஹான்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-03. Retrieved 2012-05-26.
  2. "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 2004-10-24. Retrieved 2009-10-19.
  3. http://www.idlebrain.com/news/2000march20/nandiawards2003.html

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_சரளா&oldid=4265366" இலிருந்து மீள்விக்கப்பட்டது