பெல்லி
பெல்லி என்பவர் 2023ஆம் ஆண்டில் குறும்படப் பிரிவில் ஆஸ்கார் விருது வென்ற ஆவணப்படமான தி எலிபெண்ட் விசுபெரர்சு படத்தில் யானையினைப் பராமரித்த பழங்குடி பெண் ஆவார். இந்த ஆவணப்படம் யானைக் கூட்டத்தால் கைவிடப்பட்டு பொம்மன் மற்றும் பெல்லியால் பராமரித்த ரகு எனும் யானைக் குட்டியின் கதையாகும்.[1] பொம்மன் பெல்லி தம்பதியினர் யானைக் குட்டியினை பராமரித்ததையும் திரைப்படம் ஆஸ்கார் பரிசினை வென்றதையும் அடுத்து இந்த இணையரைத் தமிழக முதலமைச்சர் அழைத்துப் பாராட்டினார்.[2]
பெல்லியின் தந்தை வேலாயுதம் கேரள மாநிலத்தினைச் சேர்ந்தவர். இவர் முதுமலைப் பகுதியில் பயிற்சியில் இருக்கும் இந்தியத் தரைப்படை வீரர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியினை மேற்கொண்டார். பெல்லியின் தாய் மாரி. மாரி முதுமலைப் பகுதியினைச் சேர்ந்தவர். இச்சூழலில் பெல்லி தமிழக முதுமலைப் பகுதியில் பிறந்து வளர்ந்தார். பெல்லி செவனன் என்பவரை மணந்தார். செவனனை புலி அடித்துக்கொன்று விட்டது. இதன் பிறகே பொம்மனை மணந்து கொண்டார் பெல்லி.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://tamil.asianetnews.com/tamilnadu/the-chief-minister-congratulated-the-bomman-couple-who-starred-in-the-oscar-winning-film-elephant-whisperer-rrjupq
- ↑ https://m.dinamalar.com/detail.php?id=3266742
- ↑ "பெள்ளி...ரகு...அம்மு...விருது படத்தின் பின்னணியில் நெகிழ வைக்கும் பாசக்கதை" (in தமிழ்). தின மலர் பெண்கள் மலர் (தஞ்சாவூர்) 72 (193): p. 8. 18 மார்ச்சு 2023. 18.03.2023.