கனவே கலையாதே
கனவே கலையாதே | |
---|---|
இயக்கம் | வ. கவுதமன் |
தயாரிப்பு | 'Sivasakthi' Pandian |
கதை | வ. கவுதமன் |
இசை | தேவா |
நடிப்பு | முரளி சிம்ரன் டெல்லி கணேஷ் சின்னி ஜெயந்த் சார்லி தாமு ராஜீவ் |
ஒளிப்பதிவு | தங்கர் பச்சான் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | சிவசக்தி மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | 6 ஆகத்து 1999 |
ஓட்டம் | 160 நமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கனவே கலையாதே (Kanave Kalaiyadhe) என்பது 1999 ஆண்டைய இந்திய தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும். வ. கௌதமன் இயக்கிய. இப்படத்தில் முரளி, சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிம்ரன் தனது திரை வாழ்க்கையில் இப்படதில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்தார். படத்திற்கான இசையை தேவா மேற்கொண்டார். இதை சிவசக்தி மூவி மேக்கர்ஸ் தயாரித்தது. படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
கதை
[தொகு]ஆனந்த் ( முரளி ), அமிர்தா ( சிம்ரன் ) ஆகியோர் காதலர்கள். அமிர்தா ஒரு பஞ்சாபி, ஆனந்த் ஒரு தமிழர். திருமணத்திற்கு அமிர்தாவின் பெற்றோரின் ஒப்புதல் பெற, ஆனந்த் பஞ்சாபில் உள்ள அமிர்தாவின் வீட்டிற்கு செல்கிறார். அவர்கள் ஒன்று சேர்வதற்கு முன்பு, அமிர்தாவும் அவரது குடும்பத்தினரும் ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார்கள். அமிர்தாவின் பிரிவினையைத் தாங்க முடியாத ஆனந்த் மனச்சோர்வுக்குள்ளாகிறார். அவர் புதிய வாழ்க்கையைத் தொடங்கவேண்டும் என்று அவரது நண்பர்கள் அவரை சென்னைக்கு அழைத்து வருகின்றனர். அங்கு, அமிர்தாவைப் போன்ற தோற்றம் கொண்ட சாரதாவை (சிம்ரன்) பார்த்து ஆச்சர்யம் கொள்கிறார். துவக்கத்தில் இருவர்ருக்குமிடையில் ஏற்படும் சிக்கல்களுக்குப் பிறகு, ஆனந்தும் சாரதாவும் ஒருவருவரையொருவர் புரிந்துகொண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால் இந்த கட்டத்தில், சாரதாவின் பழைய காதலரான சேகர் (சக்தி குமார்) அவளுக்காக இன்னும் காத்திருப்பதை ஆனந்த் அறிகிறார். விதியின் இந்த விசித்திரமான விளையாட்டு எவ்வாறு முடிகிறது என்பதே முடிவு?
நடிகர்கள்
[தொகு]- ஆனந்தாக முரளி
- அமிர்தா / சாரதாவாக சிம்ரன்
- சாரதாவின் தந்தையாக டெல்லி கணேஷ்
- பாப்ரா ரயானாக சின்னி ஜெயந்த்
- பண்ணீராக சார்லி
- செல்வமாக தாமு
- சேகராக சக்தி குமார்
- மேலாளராக ராஜீவ்
- கயல்விழியாக கோவை சரளா
- சண்டையிடுபவராக பொன்னம்பலம்
- மானேஜரின் மனைவியாக சபிதா ஆனந்த்
- சர்தார்ஜி யோகராஜ் சிங்
- சிறப்புத் தொற்றத்தில் ராம்ஜி
தயாரிப்பு
[தொகு]இத்திரைப்படமானது அமிர்தசரசில் உள்ள பொற்கோயில், ஜாலியன்வாலா பாக், சண்டிகரில் பாறைப் பூங்கா, வாகா எல்லை, அனந்தபூர் சாஹிப். கல்சா பந்த் நிறுவப்பட்ட 300 வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.[1]
இசை
[தொகு]கனவே கலயாதே படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களுக்கும் தேவா இசையமைத்தார்.[2] படல்களை வாலி, வைரமுத்து, பொன்னியின் செல்வன் ஆகியோர் எழுதினர்.[3]
எண். | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் | நீளம் (மீ: கள்) |
1 | "கண்ணில் உன்னே" | சித்ரா | வாலி | 05:58 |
2 | "டில்லி தாண்டி" | மனோ | வைரமுத்து | 05:17 |
3 | "கண்ணோடு கண்ணோடு" | பி. உன்னிகிருஷ்ணன், மகாநதி ஷோபனா | 05:28 | |
4 | "பூசு மஞ்சள்" | ஹரிஹரன் | 05:38 | |
5 | "பூசு மஞ்சள்" | அனுராதா பாட்வால் | 05:41 | |
6 | "வாங்குடா 420 பீடா" | சபேஷ், தேவா | பொன்னியின் செல்வன் | 05:27 |
வரவேற்பு
[தொகு]இந்து எழுதிய விமர்சனத்தில் "சிவசக்தி மூவி மேக்கர்ஸ்"சின், "கனவே கலையாதே" படத்தை அதன் அறிமுக இயக்குநர் வி. கௌதமனால் சுவையாகவும், உணர்ச்சி நிறைந்த திருப்பங்கள் கொண்டதாகவும் எடுக்கபட்டுள்ளது. முன்னணி ஜோடிகளான, முரளியும், சிம்ரனும் தங்கள் பாத்திரங்களை ஆழமாக வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் தனது திரைக்கதை மூலம் முதல் பாதியை நல்ல வேகத்தில் கொண்டு செல்கிறார் ".[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://m.rediff.com/movies/1999/jul/26ss.htm
- ↑ "Kanavae Kalayathae (1999)". Raaga.com. Archived from the original on 13 September 2022. பார்க்கப்பட்ட நாள் 18 May 2023.
- ↑ http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000079
- ↑ https://web.archive.org/web/20120405015425/http://www.cscsarchive.org:8081/MediaArchive/art.nsf/(docid)/D585681E7E02040365256940004D0E19